Header Ads



அலி சாஹிர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு


தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியத்திற்காக அலி ஸாஹிர் மௌலானா சஜித்துடன் கைகோர்த்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இன்று (03) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியத்திற்காக சஜித் பிரேமதாசவுடன் கைகோர்க்கப்போவதாக தெரிவித்தார்.

 1988 முதல் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவர், 2015 ல் சமூக வலுவூட்டல் இராஐங்க அமைச்சராக இருந்தார்

1994 ஆகஸ்ட் 16 முதல் 2004 ஜூன் 23 ஆம் திகதி வரை யு.என்.பி.யைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், எல்.ரீ.ரீ.ஈ தனது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்றத்தில் இருந்து விலகினார், பின்னர் அமெரிக்காவின் இலங்கை தூதரகத்தில் மூத்த இராஜதந்திரி கடைமையாற்றினார்.

 2010 ல் இலங்கைக்கு திரும்பிய அவர் எராவூர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பின்னர் கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் 2015 இல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4 comments:

  1. KURANGUKAL!!! POKETTUKALAI NIRAPPA
    ENGU VENDUMAANALUM
    PAAYALAAM.

    ReplyDelete
  2. மிஞ்சிய ஒரேயொரு முஸ்லிம் காங்கிரஸ் MP யும் சேர்ந்துவிட்டார் இனி அந்த கட்சி தேவையில்லைதானே? கலைத்துவிடுங்கள்.எங்கள் உரிமை, கடமை அது..இது என்று பேசி என்ன சாதித்தீர்கள்? கடைசியில் எங்கள் ஐனாசாவையும் புதைக்க முடியாமல் ஆக்கிவிட்டீர்கள்.இறைவன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறான்.மறந்து விடாதீர்கள்.அப்துல் அஹத்

    ReplyDelete
  3. அலி சாகிர் மௌலானா இம்முறை தேர்தலில் வென்று இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று எவராலும் guess பண்ண முடியாது. முஸ்லிம்களுக்கு என்று சுய கட்சி தேவை இல்லை என்பது நடந்து முடிந்த நிகழச்சிகளின் மூலம் புலனாகிறது. முஸ்லிம் பாராளுமன்றவாதிகள் மட்டுமல்ல அவரகளின் அடிவருடிகள்கூட அற்ப சுகத்திற்காக தமது இனத்தை பகடைக்கு இரையாக்குகின்றனர். ஏதோ அவரகள் உல்லாச வாழ்க்கை மக்களின் பணத்தில் நடாத்திக் கொண்டு இருக்கின்றனர். அஷ்ரபின் பின்பு நிலைமை இவ்வாறுதான் இருக்கின்றது. ஹக்கீமும் ரிசாதும் பிரிந்து இரு கட்சிகளிலும் தனித்தனியாக இணைவதில் தப்பு இல்லை. அப்படித்தான் இருக்கவும்' வேண்டும். இப்போது பாருங்கள். முஸலிம்களுக்கு இப்போது கட்சியே இல்லை. எவர் ஆட்சிக்கு வந்தாலும் அடியும் குத்தும்தான் விழும். இன்றைய Jaffna Muslim ல் கர்தினால் ரஞ்ஞித் அவரகள் கூறிச் சென்ற கருத்தைக் கவனியுங்கள். இஸ்லாத்திற்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எதிராகக் கிளர்ந்து எழுந்துவிட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.