Header Ads



மரணித்தவரது நாட்டில் அடக்குவதே முறையாகும் - மாலைதீவிலோ, பவளத்தீவிலோ அல்ல


- அஷ்ஷைக் நாகூர் ளரீஃப் -

குடிமகன் என்ற தகுதி இறையான்மையுள்ள நாட்டின் அரசியல் சட்டத்தால், கடமைகளும் பொறுப்புகளும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் குடிமகன் என்ற தகுதி அடைந்தவர்களுக்கு அந்நாட்டில் குடியுரிமை, வாழ்வுரிமை, வாக்குரிமை, வேலை செய்யும் உரிமை, சொத்துக்கள் வாங்கும் உரிமை வெளிநாடுகளிடருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பும் உரிமை போன்ற உரிமைகள் கிடைக்கும்.

அதே போன்று, ஒரு நாட்டில் வாழ்ந்த அல்லது வாழும் உரிமை கிடைக்கப் பெற்றவர், மரணித்தால் அதே நாட்டில் அடக்கம் செய்யப்படும் உரிமையையும் அந்த பிரஜை அடைந்து கொள்கின்றார். இது ஒரு நாட்டின் பிரஜாவுரிமையைச் சேர்ந்த அம்சமாகும்.

இவ்வாறிருக்க கெரோவின் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கான முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்று வருவதானது சர்வதேசத்துப் பார்வையில் ஒரு பிரஜையின் உரிமையை மறுக்கும் செயலாகும்.

ஒரு நாட்டுப் பிரஜை என்பவன், அந்த நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து மரிப்பதைப் போன்று, அதே தேசத்தில் மரணித்து நல்லடக்கம் செய்யப்படுவதற்கும் முழு உரிமையும் பெற்றவனாவான் என்ற அடிப்படையில், மாலைதீவிலோ அல்லது வேறு ஒரு நாட்டிலோ அடக்கம் செய்ய முடியாது.

அத்துடன், கெரோனாவின் தொற்றினால் மரணித்த ஒரு முஸ்லிமை தண்ணீர் வளம் கொண்ட ஒரு தீவான மாலைதீவில் அடக்கம் செய்ய முடியுமாயின், ஏன் தண்ணீர் வளம் குறைந்த இலங்கையில் ஒரு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்ய முடியாது என்ற வினாவும் தோன்றும். 

எனவே, நாம் பிறந்த மண்ணே எமது மரண வாழ்விற்கும் தரப்பட வேண்டும். 

இடுகாடு என்பது இறந்தவர்களை குழிதோண்டி புதைக்கும் ஒரு நிலப்பகுதி ஆகும். இது பொது இடம் என்றாலும்இ மக்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப சமயம் மற்றும் இனம் சார்ந்த தனித்தனி இடங்களில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. 

இங்கு இறந்தவர்களின் உடலை (பிணம்) குழி தோண்டி புதைத்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள். சில பகுதிகளில் பிணங்களைப் புதைத்த இடத்தில் ஒரு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் மீண்டும் பிணங்களை புதைப்பார்கள். இது பெரும்பாலும் இந்து மதத்தின் வழக்கமாகும்.

கிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை புதைக்குமிடத்திற்கு கல்லறைத் தோட்டம் என்று பெயர். இது கிருத்துவ தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இங்கு இறந்தவர்களை புதைத்த இடத்தில் கல்லறை எழுப்புகின்றனர்.

இஸ்லாம் மதத்தில் இறந்தவர்களை புதைக்குமிடத்தை கபர்கிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. 

முஸ்லிம்களைப் பொருத்த மட்டில், மரணித்த பின்னர் அவர்களது மண்ணறைகளைத் தரிசிப்பதும் அவர்களுக்காக துஆ -  பிரார்த்தனை புரிவதும் ஒரு வணக்கமாகும். 

அந்த ஸியாரத்துல் குபூர் என்ற வணக்கத்தைச் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும் என்றும் அதற்காக ஒரு கப்று – மண்ணறை அல்லது அடக்கஸ்தளம் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஓர் அம்சமாகும்.

மாலைதீவு போன்ற வெளிநாடுகளில் அடக்கம் செய்யப்படுமாயின் அவர்களது உரிமை மறுக்கப்படுவதுடன், அவர்களது பல கிரிகைகளும் மறுக்கப்படுகின்றன.


No comments

Powered by Blogger.