Header Ads



முஸ்லிம்களின் உடல்கள் எரிப்பு - அலிசப்ரி எச்சரிக்கை


(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட் 19 ஸல் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தால் முஸ்லிம் இளைஞர்கள் காலப்போக்கில் மனஅழுத்தத்துக்குள்ளாகி அடிப்படைவாத குழுக்களுடன் இணைந்துகொண்டால் அது பாரிய விபரீதத்திலே முடிவடையும்.

அந்த நிலைக்கு செல்ல இடமளிக்கக்கூடாது. அத்துடன் மரணிப்பவர்களின் உடலில் இருந்து வைரஸ் வரவுமா இல்லை என்பதை வைரஸ் தொடர்பான நிபுணர்களே தீர்மானிக்கவேண்டும். மாறாக புவியியலாளர்களுக்கு அதனை தீர்மானிக்க முடியாது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறாமல் இருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளையும் எமது நாடு, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரமே மேற்கொண்டு வருகின்றது.

அதன் பிரகாரமே மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய அனுமதிப்பதுபோல் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கவேண்டும் என்பதே முஸ்லம்களின் வாதமாக இருக்கின்றது.

அது முறையற்ற வாதம் அல்ல. அநியாயமான கோரிக்கையும் இல்ல. இந்த விடயம் இந்தளவு கருத்து முரண்பாட்டுக்கு ஏன் செல்கின்றது என்பதே புரியாமல் இருக்கின்றது.

கொராேனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய உலகில் இருக்கும் நாடுகளில் சீனாவை தவிர மற்ற எனைத்து நாடுகளும் அனுமதிக்கும்போது இலங்கை மாத்திரம் இதற்கு அனுமதிக்காமல் இருப்பது பாரிய பிரச்சினையாகும்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலில், மரணிப்பவர்களை தகனம் மற்றும் அடக்கம் செய்ய அனுமதித்திருக்கும்போது இலங்கையும் சீனாவும் மாத்திரமே அதனை பின்பற்றாமல் இருக்கின்றது.

இதனை இனவாதமாக பார்க்கக்கூடாது.ஒரு சமூகத்தை இலக்குவைத்து இதனை செய்வதாக இருந்தால் அது நல்லதில்லை.

அத்துடன் கொவிட்டில் மரணித்தவரின் சடலத்தில் இருந்து வைரஸ் பரவும் என்பதை விஞ்ஞான ரீதியில் ஒப்புவிக்க முடியாமல் இருக்கின்றது.

அதனால்தான் உலக சுகாதார அமைப்பும் அடக்கம் செய்ய அனுமதித்திருக்கின்றது. இந்த சடலங்களில் இருந்து வைரஸ் பரவுமா இல்லையா என்பது தொடர்பில் வைரஸ் தொடர்பான நிபுணர்களுக்கே தெரிவிக்க முடியும். மாறாக புவியியலாளர்களுக்கு தீர்மானிக்க முடியாது.

சடலங்களில் இருந்து வைரஸ் பரவ வாய்ப்பில்லை என எமது நாட்டில் இருக்கும் வைரஸ் தொடர்பான சிரேஷ்ட வைத்திய நிபுணரான பேராசிரியர் மலித் பீரிஸ் மற்றும் பபா பலிகவதன மற்றும் பலர் உறுதியாக தெரிவித்திருக்கின்றனர். 

அவ்வாறு இருந்தும் சடலத்தை முற்றாக தொற்று நீக்கம் செய்து, இரண்டு பொலிதின் உறைகளில் சுற்றி ஆழமான குழியில் அடக்கம் செய்தால் எப்படி வைரஸ் பரவும் என கேட்கும் கேள்வியை மறுக்க முடியாது.

அத்துடன் முஸ்லிம்களின் சடலங்களை எமது நாட்டில் எரிப்பது தொடர்பில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று அடக்கம் செய்ய மனுமதிக்குமாறு 51 நாடுகளை உள்ளடக்கிய முஸ்லிம் நாடுகளின் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் எழுத்துமூலம் கேட்டிருக்கின்றன. இது எமது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் எமது இந்த தீர்மானத்தால் முஸ்லிம் இளைஞர்களில் சிலர் அடிப்படைவாதத்தினபால் தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கின்றது. 

மரணிப்பவர்களை அடக்கம் செய்யக்கூட உரிமை இல்லை என்ற மன அழுத்தத்துக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டு, அடிப்படைவாதிகளுடன் இணைந்துகொண்டால் அது பாரிய விபரீதத்திலேயே முடிவடையும். இதற்கு இடமளிக்கக்கூடாது.

மேலும் மாலைதீவுக்கு கொண்டுசெல்வது தொடர்பாகவும் பேசப்பட்டு வருகின்றது. இதற்கு அனுமதிப்பது சர்வதேச ரீதியில் எமக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும்.

மாலைதீவில் அடக்க அனுமதிக்க முடியுமானால் ஏன் எமது நாட்டில் முடியாது என்றே நாங்கள் கேட்கின்றோம் என்றார்.

6 comments:

  1. ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது என்பது சாதாரண விஷயமல்ல. எது வந்தாலும் முகங்கொடுக்கத் தயாரான பின்பே இவ்வாறு பேச முடியும். வாழ்த்துக்கள் அமைச்சரே.

    ReplyDelete
  2. அலி சப்ரி அவரகளுடைய இந்த பேச்சினைக் கேட்டதும் உள்ளம் சிலிர்க்கின்றது. கண்கள் நீர்த்திவலைகளைக் கக்குகின்றன. முஸ்லிம்களின் தலைவரகள் எனத் தமக்குத்தாமே முடிசூடிக் கொண்ட தலைவர்கள் பாத்ரூமிக்குள் ஒழிந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத் தரப்பிலுள்ள பொறுப்புவாய்ந்த ஒருவரே தனது சமூகததிற்காக வாதிடுவது எமது நெஞ்சினை ஏதோ செய்கின்றது. பலவந்த ஜனாசா ஒழிப்புப் போராட்டத்திற்கு மாத்திரமல்ல முஸ்லிம்களுடைய ஏனைய சகல விடயங்களையும் தலைவர் அலி சப்ரி மூலமாகத் தொடர்ந்து முன்னெடுத்தாலும் பாதகமில்லைபோல் தெரிகின்றது. அதற்கு முயற்சிகள் தொடர வேண்டும்.

    ReplyDelete
  3. If it true why can not 22 Muslim MPd go home ..resign the posts and go home and let us see what can they do..
    Let Tamils and Christian communities join with us ..
    Unless we are firm on this; they will mock us ..
    That has been taking place ..we do not have a strong leadership .
    President who lived 20 years in USA does not understand the notion of freedoms

    ReplyDelete
  4. இவ்வளவு விடயங்கள் தெரிந்த உங்களுக்கு ஏன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பை காட்டத் தெரியாது

    ReplyDelete
  5. Very strange that Justice Minister, Mr. Ali Sabry, who is very close to the President, seems to be clueless about the Govt.'s intransigence on the Cremation of Muslims who die of Covid-19.

    Even more strange is the willingness of the other Rajapakse brothers, the Prime Minister and the younger Basil Rajapakse, who are reported to be considering the idea of permitting burial in selected places in the country.

    With the idea of burying the bodies in Maldives coming from the President, it seems that there is difference of opinion within the Family itself on this matter.

    ReplyDelete
  6. Dear Brother Sabri... thanks for your voice...

    Dear Muslim brothers and sisters... raise your hand toward Allah, ask him to punish those responsible individuals and authorities who act inhuman way to burn our covid dead bodies.

    Also ask Allah to defeat this government, who keep silent in this issue just passing the ball to health authority, even after getting enough support for 20th resolution form Muslim mps

    ReplyDelete

Powered by Blogger.