December 26, 2020

ஜனாஸாக்களை தொடர்ந்து தகனம் செய்ய வேண்டும், இது பௌத்த நாடு, அநாவசிய சர்ச்சைகளை ஏற்படுத்தாதீர்கள் - ஆனந்த தேரர்


(நா.தனுஜா)

இலங்கை ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்பட வேண்டும். ஆகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் கொள்கை தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் பிறிதொரு தரப்பினரால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு அமைவாகத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய வேண்டாம் என்றும் அவற்றை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தற்போது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கம் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் அடிப்படையிலேயே ஆட்சியைப் பொறுப் பேற்றுக்கொண்டது.

இது இவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களைப் புதைப்பதால் அதிலிருந்தது மேலும் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே சடலங்களை உரிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது தமது மத நம்பிக்கைக்கு முற்றிலும் முரணானது என்று முஸ்லிம் சமூகத்தினர் கூறுகின்றார்கள்.

ஆனால் இது ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்படவேண்டும். எம்மால் அராபிய நாடு ஒன்றுக்கு புத்தரின் சிலையை எடுத்துச் செல்லவோ, அதை அங்கு நிர்மாணிக்கவோ முடியாது.

எம்மாலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆனால் நாம் அதனைச் செய்யமாட்டோம். ஆகவே இவ்விவகாரத்தில் அநாவசியமான சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று இஸ்லாமிய மதத்தலைவர்களை வலியுறுத்துகிறோம் என்றார்.

தற்போது குரல் எழுப்புகின்ற ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட எந்தவொரு முஸ்லிம் தலைவருமே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை. எனவே அவர்கள் இவ்வாறு போராடுவார்களெனின், நாங்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கே தயாராக இருக்கின்றோம். நாங்கள் பௌத்த தர்மத்திற்கு ஏற்றவாறு அமைதியான முறையில் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

17 கருத்துரைகள்:

Please do not publish these type of idiot's media conferenece in Public.
They have to understand, ceylon is a small and poor country.
If the situation go like this, Tamil and muslim will get togather and country will be divided into two like Sudan - South Sudan, East Timor , west Timor, Bosina, Serbia etc.

He is telling stupid he is jungle Dog 🐕

மதிப்புக்குரிய முருந்தட்டுவ ஆனந்த தேரரே!அப்படியே இன்னொரு ஊடக ஏட்பாற்றை செய்து இந்த பௌத்த நாட்டில் நன்கொடை,கடன், அபிவிருத்தி,ஏற்றுமதி,இறக்குமதி,போன்ற எல்லாவற்றுக்கும் புலம் பெயர்ந்த பௌத்தர்கள் பௌத்த நாடுகள் மற்றுமே உரிமை இருக்கிறது என்றும் எந்த ஒரு முஸ்லீம் நாடுகளில் இருந்து எதுவும் தேவை இல்லை இதுவரை தந்த கடன் மற்றும் உதவிகளை உடனே திருப்பி தருகிறோம் என்று!எனக்கு இரண்டு சந்தேகம்?பௌத்த நாடு ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்கிறீர்கள் மது,சூது,விபச்சாரம் பௌத்த தர்மத்தில் தடை செய்யப்பட்ட பெரும் பாவம் என்று உங்களால் சொல்ல முடியாது?தலதா மாளிகை புனித பூமி என்று சொல்கிறீரகள் தாய்லாந்து ரஷ்யா ரொமேனியா உக்ரைனில் இருந்து அரை நிர்வாணமாக கார் பந்தயம் நடந்த நேரம் ஏன் உங்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை?

உங்களுடைய இந்த தலைக்கனம் பெரும்பான்மை என்கிற திமிரால் ஒரு இந்தியாவோ சீனாவோ இந்த நாட்டை முழுமையாக விழுகிவிட்டு உங்களுக்கு ஆப்படிப்பார்கள்

You Terror Mind your own business. Go to Jungle and follow lord Buddha's Great path without doing racism... In Peaceful Srilanka.

You Terror Monk MIND your own business. Go to Jungle and follow lord Buddha's Great path without doing RACISM... In Peaceful Srilanka.

இதன் பிரதிபலனாக இலங்கையில் ஏற்படப்போகின்ற பிரச்சினைகளுக்கு உழைத்து வாழ்வோர்தான் அகப்படுவர் மாறாக தானம் சாப்பிடும் இவரைப் போன்றவர்களுக்கு மற்றவர்கள் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

பொய் செல்வதென்றாலும் பொருந்த சொல்ல வேண்டும் எல்லோரும் கன்னடம் தெரிவித்தார்கள் இது பௌத்த நாடல்ல சிங்கள மக்கள் அதிகம் வாழும் நாடு ஒரு மதமும் இங்கு உருவானதால்ல எல்லா மதமும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது

Yellarukum ஒரே சட்டம் yentral muslim doctors களுக்கு kaavikooddathai பத்தvaikka உங்க அரசாங்கம் thadavithikaathakum yendaa காவிkooddamey உங்களுக்கு maddum yennadaa உலகththil இல்லாத சட்டம்

Can he demand the demolition of all Churches, Hindu Temples and Mosques and ask all Sri Lankans to attend Pansala only sighting one country one law.

Read the constitution to know the rights of every citizens. of this land.

I am a SriLankan, I practice ISLAM, this is my choice. As a citizen of this country you have your choice and we do not middle in your choice.

Yes.. No one should harm one another in their personnel and religious matter. it is their freedom.

ONE COUNTRY ONE LAW means to Respect the rights of every citizens.. If you mean it is to favour one group in this land... How come you can call it ONE COUNTRY ONE LAW ?

Foolishness should have limit.

day fuck u maen old fuckar u doond no in caming from vear you are rade all so ceming from aout diet ok fuck yun

அவ்வளவு ரோசம் உள்ள நீங்க எதற்கு முஸ்லீம் நாடுகளிடம் பிச்சை கடன் கேட்டு தவிக்கிற. நல்ல கெத்தாக சொல்லுங்களன் தேரர் முஸ்லீம் நாட்டின் இருந்து எந்த உதவியும் வேண்டாம், முஸ்லீம் நாட்டில் உள்ள பௌத்தர்கள் திருப்பி எடுக்க சொல்லி, IF YOU ARE REALL BRAVE BUDHIST MONK TELL THIS FIRST

பௌத்த நாடு என்றால், ஜனாஸா எரிக்கனுமா? என்னப்பா சொல்றீங்க?

If you said.one country one law..Then why Muslims or Tamils or Christians can't become president or prime minister of this country

Post a comment