December 26, 2020

முஸ்லிம்களே அவசரப்படாதீர்கள், ஆவேசம் வேண்டாம், நிதானமாக சிந்தியுங்கள் - நிகழ்ச்சிநிரலை புரிந்து கொள்ளுங்கள்- எம். என் முஹம்மத் -

பல இடங்களில் ஜனஸா எரிப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றது. சில இடங்களில் யார் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர் என்று தெரியாமல், மக்கள் கலந்து கொள்கின்றனர் .

முஸ்லிம் சமூகம் நடக்கும் நிகழ்வுகளிற்கு பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரழ்களை புரிந்து கொள்ள வேண்டும். ஏதொ ஒரு சக்தி முஸ்லிம் இளைஞர்களை வன்முறையின் பால் தூண்டுவதற்கு முற்படுகிறது தெளிவானது .உரிய திட்டமிடல் இன்றி இளைஞர்களை ஒன்று கூட்டுவது மிகவும் ஆபத்தானது .அவர்கள் எப்போதும் அடங்கி இருப்பார்கள் என்று இல்லை சில போது எதைப் பேசுகின்றோம் ,எதைச் செய்கின்றோம் என்று தெரியாது தொழிற்பட்டு வேறு பிரச்சினைகளை உண்டாக்க முடியும் . இவ்வளவு தேசிய சர்வதேச அழுத்தம் வந்தும் தொடராக எரிப்பதற்கு பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாட வேண்டும் .

ஒன்றைத் தெளிவாக விளங்க வேண்டும் .பாணி குடிப்பதற்கு கேகாலையில் ஒன்று கூடும் மக்களில் இருந்து இந்த நாட்டு பெரும்பான்மை சமூகத்தின் அறிவு மட்டத்தை அறிந்து கொள்ள முடியும் .அத்துடன் ஒரு மருத்துவ பேராசிரியர் கூட கண்னுக்கு புலப்படா சக்தி மூலம் அந்த மருந்து தயாரிக்கும் முறை கொடுபட்டுள்ளதாக கூறுவதில் இருந்து இந்த நாட்டின் புத்திஜீவித்துவம் எங்கே உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இந்த நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை தமிழ் ,முஸ்லிம் மக்கள் சிற்று அறிவு பூர்வமாக சிந்திப்பதுவே .அதனை பெரும்பான்மை சமூகம் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களிடம் சிந்தனை மாற்றம் இல்லை .தமிழ் ,முஸ்லிம் மக்களிடமும் பல மூட நம்பிக்கைகள் இருப்பதை மறுக்க முடியாது .கொத்து ரொட்டி துவக்கம் உள்ளாடை வரை உள்ள நிகழ்சி நிரல்களை நாம் இன்னமும் புரியவில்லை .

போராட்டங்கள் எவ்வளவு சாத்வீகமானதோ அதன் விளைவு பலமானது .அந்த வகையில் கபன் துணிப்போராட்டம் தொடர வேண்டும் .ஆனால் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் ஒரு விரிந்த கலந்துறையாடல் நடத்த வேண்டும் .

ஊர் ,பெயர் இல்லாத ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளிற்கு பின்னால் நாம் நினைக்காத சக்திகள் இருக்க முடியும் .எதையும்  சட்ட பூர்வமாக செய்ய வேண்டும் .

முஸ்லிம் தலைமைகள் இது தொடர்பான ஒரு வழிகாட்டலை அவசரமாக வழங்க வேண்டும் .சில நேரம் ஆர்ப்பாட்டங்களை வெளிநாடுகளிற்கு மட்டுப்படுத்தி இலங்கையில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற வேறு வழிமுறைகள் பற்றி சிந்திப்பது சிறத்தாக அமையலாம் .

இது கலந்துறையாடலிற்கான பதிவு .


7 கருத்துரைகள்:

மிக முக்கியமான பதிவு. கொரோனாவைவிட பெளத்த அடிப்படை வாதத்துக்கு முஸ்லிம் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒன்று சேர ஒரு மந்திரச் சொல் தேவை. இப்ப அவர்களது மந்திரச்சொல் பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் /வாகாபிசம் என்பதாகும். முஸ்லிம் இளைஞர்களின் எதிர்ப்பை அடிப்படைவாதமாக சித்தரிக்கக்கூடிய வாய்ப்புக்கே சிங்கள பெளத்த அடிப்படை வாதிகளும் உளவுத்துறையும் சேர்ந்து காத்திருக்கிறார்கள்.

நல்ல பதிவு. முஸ்லிம் தலைமைகள் (அரசியல்) ஒழுங்காக சமுகத்துக்காக வழிகாட்டி இருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காதே.அவர்களின் சுயநலப் போக்குத் தான் இந்த நிலைக்குக் காரணம்.நியாஸ் இப்றாகிம்.

Really thought provoking. We have to make the neutral Sinhalese to talk on our cause. May Allah bless you.

சிந்திக்க வேண்டிய கருத்து

جزاك لله خير
சரியாகச் சொன்னீர்கள் சார் ,
மாற்று நடவடிக்கைகளை தான் நாம் சிந்திக்க வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதுதான் தலை சிறந்தது.
உலகின் நிம்மதியை சீர்குலைக்க முயல்பவர்கள் ஒரு பக்கம் , பல தசாப்தங்களாக நாட்டின் நிம்மதியை சீர்குலைத்து பழகியவர்கள் இன்னொரு பக்கம் எல்லோரும் பயன்படுத்த நினைக்கும் காவிகளாக நாம் தான் இங்கு இருக்கிறோம் இவற்றை முறியடிப்பதற்காய் ஒன்றிணைந்து பலதரப்பட்ட குழு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் பேரின மக்கள் மத்தியில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள், முஸ்லிம் எதிர்ப்பு கருத்துக்கள் வளர்வதை கட்டுப்படுத்த அறிவார்ந்த ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

சரியாக சொன்னிர்கள் சகோதரரே ஜனாசா எரிப்பு விடயத்திலும் அதிகமாக வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல்,ஆலோசனை, நிகழ்ச்சி நிரல் நிறைந்து இருக்கிறது பல விஷயங்கள் மூடி மறைக்க!
சரியாக சொன்னிர்கள் சகோதரரே!ஜனாசா எரிப்பு விடயத்திலும் அதிகமாக வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல்,ஆலோசனை, நிகழ்ச்சி நிரல் நிறைந்து இருக்கிறது பல விஷயங்கள் மூடி மறைக்க மத்திய வாங்கி பிணை மோசடி,ஈஸ்டர் தாக்குதல் முக்கிய குற்றவாளிஇதுபோல இன்னும் பல இலுமினாட்டிகள் இலங்கையில் புகுந்து விளையாடுகிறார்கள்.

மாலைதீவில் அடக்கிய சடலங்களின் வைரஸ் கடலடி நீரோட்டத்தால் இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்று ஏதாவதொரு மீடியா புலம்பினால் மறுகணமே அதனை வேத வாக்காக நம்பி எதிரொலிக்கும் புத்திசாலிகள் நம்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்வோம்...?

Post a comment