Header Ads



கொரோனா தொற்றை கையாளுவதில் அமீரகம் முதலிடம்


மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றை கையாளுவதில் அமீரகம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இங்கிலாந்து நாட்டின் பிராண்ட் பினான்ஸ் அமைப்பு குளோபல் சாப்ட் பவர் குறியீடு என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சர்வதேச அளவில் 105 நாடுகளில் கொரோனா தொற்று கையாளுவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

அதாவது ஒரு நாட்டில் கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், சுகாதார பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், மருந்துகள் மற்றும் உபகரணங்கள், விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க சிறப்பாக செயல்படும் நாடுகளில் அமீரகம் முதல் இடம் பிடித்துள்ளது. அதேபோல் சர்வதேச அளவில் 105 நாடுகளில் அமீரகம் 14-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த தகவலை அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நாட்டின் (அமீரகத்தின்) செயல்திறனை உலக நாடுகள் சான்றளித்துள்ளது. இதன் மூலம் நமது வரலாற்றில் பிரகாசமான முத்திரையை பதித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.