Header Ads



கொரோனா பாதித்த கைதிகள் சிறையிலிருந்து தப்பி, சமூகத்திற்குள் நுழைந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் - பாதுகாப்பு செயலாளர்


மஹரசிறைச்சாலை கலவரம் காரணமாக சமூகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

மஹரசிறைச்சாலை கலவரத்தை அடக்குவதற்கு அரசாங்கம் அளவுக்கதிகமான பலத்தை பிரயோகித்தது இதனால்உயிர்ச்சேதம் ஏற்பட்டது என சிலர் கருதுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை உடைப்பு இடம்பெற்றிருந்தால் அதன் விளைவு மோசமானதாக காணப்பட்டிருக்கும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மஹரசிறையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 189 கைதிகளும் காணப்பட்டனர் அவர்களை அடுத்த நாள் வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டிருந்தோம் என தெரிவித்துள்ள கமால் குணரட்ண அவர்கள் சிறையிலிருந்து தப்பி சமூகத்திற்குள் நுழைந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 189பேரும் கொவிட் 19 கிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 180 பேர் விளக்கமறியலில் உள்ளனர்,அவர்களிற்கு பிணை வழங்கியுள்ளோம் விடுதலைக்கு முன்னர் அவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துவதற்காக வேறு இடத்திற்கு அனுப்பியுள்ளோம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

ஞாயிற்றுகிழமை மாலையில் மஹர சிறைச்சாலை கைதிகள் போதைப்பொருட்களை பயன்படுத்திய பின்னர் இருளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் அன்றிரவு படையினரையோ பொலிஸாரையோ சிறைச்சாலைக்குள் அனுப்புவதில்லை என தீர்மானித்தேன் மறுநாள் காலையிலேயே அவர்களை அனுப்பினேன் எனவும் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இரவு படையினரையும் பொலிஸாரையும் அனுப்பினால் பெருமளவு உயிரிழப்புகள் காயங்கள் ஏற்படலாம் என்பதாலேயே நான் அவ்வாறு செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை பகல் நாங்கள் மஹர சிறைச்சாலைக்கு அதிகாரிகள் சிலரை அனுப்பினோம்,பத்து நிமிடத்தில் அவர்கள் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் எனவும் தெரிவித்துள்ள கமால் குணரட்ண அவர்கள் கிசிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கைப்பற்றினார்கள் இதனையே கைதிகள் போதைக்காக பயன்படுத்தினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையின் சமையலறையில் காணப்பட்ட கூர்மையான கத்திகளை கைதிகள் கைப்பற்றியிருந்தனர் அவற்றையும் படையினர் கைப்பற்றினார்கள் எனவும் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.