December 20, 2020

நீங்கள் புரியாணி சாப்பிடும் போதாவது, இதை பற்றி பேச முடியாதா..?


- பாறுக் ஷிஹான் -

தமிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சுமந்திரன் எம்.பி போன்றவர்கள்  கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும் என    உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக அமையத்தில்  ஞாயிற்றுக்கிழமை(20) மாலை     இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

கல்முனை பிரச்சினையாக இருக்கட்டும் முஸ்லீம் தமிழ் பிரச்சினையாக இருக்கட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் இரண்டு வகையான நிலைப்பாட்டினை எடுக்கின்றனர்.ஒன்று மேடைகளில் பேசுகின்ற போது தமிழ் முஸ்லீம் ஒற்றுமை வேண்டும் என்பார்கள்.கீழ் இறங்கி வருகின்ற போது தமிழ் முஸ்லீம் சமூகத்தினை எவ்வாறு பிரிப்பது என்ற பாங்கில் செல்வதை  நாம் காண்கின்றோம்.சுமந்திரன் கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் என்ன செய்கின்றார்கள்?தமிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள்.இதனை நாம் பல தடவை கண்டுள்ளோம்.நீங்கள் புரியாணி சாப்பிடும் போதாவது இதை பற்றி பேச முடியாதா?ஹக்கீமும் சம்பந்தனும் இணைந்து புரியாணி சாப்பிட முடியுமென்றால் ஏன் கல்முனையில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து புரியாணி சாப்பிட முடியாது.என்று நாங்கள் கேட்கின்றோம்.மக்கள் மத்தியில் உசுப்பேத்த வேண்டும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும். முஸ்லீம்கள் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும்  என அண்மையில் சுமந்திரன் கூறி இருந்தார்.

ஆனால் தமிழ் மக்களுக்கும்  முஸ்லீம் மக்களுக்கும் இடையே இவ்வித பிரச்சினையும் இல்லை.அரசியல்வாதிகள் தான் பிரச்சினையை தூண்டுகின்றனர் என்பதே எமது கருத்து  என்றார்.

12 கருத்துரைகள்:

இவனை போன்ற தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் முட்டாள்களின் செய்திகளை பிரசுரிப்பதே தவறு. மஹிந்த வீட்டில் கூட்டி பெருக்க ஆசைப்படும் இவன் என்றாவது சமுதாயத்திற்காக குரல் கொடுத்ததுண்டா?

Mr. Mubarak - Can you reply and make us aware what you or your party did for the cremation issue on behalf of the community

You you you.......... i dont want to say anything...shut-up

ஹக்கீம்,சம்பந்தன், சுமந்தின் என்போர் இலங்கையில் உள்ள அரசியல் இராஜதந்திரிகளில் அடிக்கோடிட்டு குறிப்பிடக்கூடியவர்கள். தன்னையும் தன்னைச்சாரந்தோரயும் காப்பாற்றிக்கொண்டு கழுவிய மீனுக்குள் நழுவிய மீனாக நடந்துகொள்வதே இலங்கை போன்ற பிற்போக்கு அரசியல் கொண்ட நாடுகளில் சிறந்த இராஜதந்திரமாகும் என்பது ஒரு பார்வையாகும்.

இது ஒரு அலப்பறை.....ஹக்கீமை பத்தி என்ன சரி பேசாட்டி இவருக்கு தூக்கம் போகாது போல..... மொதல்ல உங்க தொப்பியை கழட்டுங்க....அப்போ தான் மண்டைல இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் வேல செய்யும்................

Where is NOOR NIZAM and Ulama Katchi Mubarak moulavi (red cap). Why don't you both go and speak to your master. உங்கள் இரண்டு பேருக்கும் ரோஷம் ஏதும் இருந்தால் இதற்கு இந்த யாழ் முஸ்லிம் இல் மறுமொழி தர வேண்டும் என்று தயவாக கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஏமாந்த மனிதர்கள்.

சிவப்பு தொப்பி ஆசாமி. எங்கே இவ்வளவு காலமும் போனீங்க. பெரியவர் வீட்டில கிரி பத் சாப்பிடவோ.

தற்போது இதுதான் சமூகத்துக்கு தேவையா மௌலவி அவர்களே? இந்த நாட்டிலே எமது ஜனாஸா க்கள் எரிக்கப்படுவது உங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்பட வில்லையா?

அஸ்ஸலாமு அலைக்கும் முபாறக் மெளலவி அவர்களே!
உங்களுக்கு சுருக்கமாக சில விடயங்களை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
உங்களுடைய உலமா கட்சிதான் முதன்முதலில் மொட்டுடன் ஒப்பந்தம் செய்து ஜனாதிபதியை வெல்லவைத்த முஸ்லிம் கட்சி. எனவே அரசாங்கம் நடத்தும் ஜனாசா எரிப்பு நாடகத்தை நிறுத்தி அடக்கம் செய்யும் உரிமையை உங்களால் பெற்றுத்தரலாம் தானே. அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்த ஒரு கட்சி என்ற வகையில் கல்முனை பிரச்சினை மற்றும் ஏனைய முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளையும், உங்கள் பார்வையில் சிறந்த ஆட்சியாளர்களாக இருக்கும் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி சாதிக்கலாம் தானே. காரணங்கள் எதுவும் கூறாமல் தயவு செய்து சாதித்துக் காட்டுங்கள். இல்லையென்றால் மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு உலமா கட்சியை கலைத்துவிடுங்கள். ஒன்றை மட்டும் புறிந்து கொள்ளுங்கள். இந்த அரசாங்கம் கடந்தகால ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாத சக்திகளை உருவாக்கி, சதிவலையை அளுத்கமயில் ஆரம்பித்தது. அதனால்தான் இதை நன்கு உணர்ந்த ஹக்கீமும் ரிசாத்தும் இவர்களுடன் இணைய முடியாமல் பிரிந்தார்கள். நீங்கள் நினைக்கலாம் முஸ்லிம்கள்மீது கொண்ட அன்பின் காரணமாக தமிழ் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தீர்களென்று. அல்லது வடக்கையும் கிழக்கையும் பிரித்துத் தந்த தலைவருடன் கூட்டுச் சேர்ந்தோம் என்றும். இப்ப என்ன நடக்கின்றது நாட்டில் முஸ்லிம்களுக்கு. ஏன் அதைப்பற்றி அறிக்கை விடமாட்டீர்கள். முஸ்லீம்கள் எல்லோரும் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தாலும் தமிழர்களுக்குப் பிறகு அடுத்த இலக்கு முஸ்லிம்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

Mowlavi Mubarak

Is your Ulama kadchi a political party or a community organisation? If it is the former, when is your party going to contest Elections?

You have the most important qualification to be a politician. That is, you come out with a lot of RUBBISH. The ONLY problem is that when you come out with RUBBISH, everybody KNOWS it while when the politicians talk RUBBISH, it takes a Long time for the people to Realise it.

NUT LOOS MENTAL, ONLY REMAINING TO ISSUE THE CERTIFICATE BY DOCTOR BUT

Post a comment