December 12, 2020

அவதூறு பரப்பி, புறம்கூறித் திரிபவர்களே - மறைவான விடயங்களில் மூக்கை நுழைப்பதை நிறுத்துங்கள்...!


- AKBAR RAFEEK -

ரிஸ்வி முப்தி  பற்றி மனம்புண்படியான கதையை சமூக வலைத்தளங்களில் பரப்பிக்கொண்டிருப்பவர்களை பார்த்து ஒரு வினாவை எழுப்புகின்றேன்.

நீங்கள் உங்களின் மறுமை வாழ்வில் எதனை விரும்புகின்றீர்கள்? நரக நெருப்பையா? சுவனத்தையா?

சிலரை இந்தக்கேள்வி புண்படுத்தும், இருந்தாலும்,  இதனை ஏன் முன்வைக்கின்றேன் என்றால், ரிஸ்வி முப்தியைப்பற்றி  புறமோ, பொய்யொ சொல்ல்கின்றீர்கள் என்பதுவே இந்த விடயத்தில் உண்மையாகும். மறுமை நாளில் இந்தநிகழ்வுபற்றியும் இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மனிதனும் விசாரிக்கப்படுவான். எந்த ஒரு மனிதனுக்கு  இன்னொரு மனிதன் எந்த விதத்திலும் அநீதம் இழைப்பதனை அல்லாஹ் விரும்புவதில்லை. ரிஸ்வி முப்தியும் ஒரு மனிதனே.

முஸ்லிம் சமூகத்திற்கு அவரினால் அவப்பெயர் ஏற்படுவது போன்று,  மனம் குமுறுவதனை Over build up ஆக நோக்குகின்றேன். அவ்வாறு இது குடிமூழ்கும் விடயமா என சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளோம். மறைவான விடயங்களில் மூக்கை நுழைப்பது அறியாமலே பாவிகளாவதற்கு வழிகோளும்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் முஸ்லிம்களை மையப்படுத்தி அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம், அதில் நடிகர்கள் முஸ்லிம்கள் என்பது மட்டுமே எல்லோரும் அறிந்த உண்மை ஆகும். தயாரிப்பாளரும் இயக்குனரும் இசை அமைப்பாளரும் இல்லாத படம் பார்த்திருக்கின்றீர்களா? இல்லை என்றால் இந்த நாடகத்திற்கும் அவ்வாறான தொழில் வல்லுனர்களும் தொழில்நுற்பவியலாளர்களும் இருப்பார்கள் என்பதை யூகிப்போம். அவர்கள் யார் என்பதனை வானம் பூமி சாட்சியாக அல்லாஹ் நன்கறிவான். ஒரு சமூகம் அநியாயம் இழைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கான தண்டனை அல்லாவிடம் நிச்சயம் மறுமையில் உண்டு. திட்டமிடப்பட்டு முஸ்லிம் சமூகம் பலி கடாவாக்கப்பட்டு நோவினை செய்யப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதக் தொடர்பான விசாரணைக்காக அழைக்கப்படும் முஸ்லிம்களை குற்றவாளிகள் என்று கருதுவதனை தவிர்ப்போம். அங்கு சாட்சியமளிக்கும் எல்லா முஸ்லிம்களும் இறை அச்சமுடையவர்கள் அல்ல என்பதனையும், அல்லாஹ்வை நேசிக்கும் சமூகத்திற்கு நேசமானவர்கள் அல்ல என்பதனையும் புரிவோம். ஏவியவன் இருக்க அம்பை நோவதனைப்போல என்பதனைவிடவும் அம்பு செய்யப்பட்ட மரத்தை சாடுவதனைப்போல் காட்சி வடிவமைக்கப்பட்டு தலையை சுற்றி மூக்கை பிடிக்க முயற்சிப்பதனைப்போன்று பொம்மலாட்டம் இடம்பெருகின்றது. இதில் எமது சமூகத்திற்கு எதிரான சூழ்ச்சி இருக்கின்றது என்பதனை புரிவோம். பிர் அவுனின் நீதிமன்றில் அவனது சட்டமும் நியாயத்தையும் தவிர வேறு என்ன எதிப்பார்க்க முடியும்?

ரிஸ்வி முப்தி இலஞ்சம் வழங்குவதற்காக வட்டிலப்பம் கொண்டு போனார் என்று அந்நிய ஊடகங்கள் கூறுகின்றது என்றாலும், அவர் எதற்கு இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்று முஸ்லிம்களே நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா? 

வட்டிலப்பத்தை மட்டும் நினைவிற் இருத்திக்கொண்டு, இலஞ்சத்தை மறந்து விட்டீர்களே? இது பொய்யாக இருக்காதா?அந்நிய ஊடகங்கள் வீசும் சேற்றை நம்பி இறை விசுவாசம் உள்ள ஒருவரை குறை கூறுவதனை விடுவோம்.

சிலந்திவலையில் பூச்சிகள் சிக்குவதைப்போல சமூகம் சிக்கவைக்கப்பட்டது. எமது குறைபாடுகள் அவர்களுக்கு வசதியாயின, இருப்பினும் இன்னும் எல்லோரினதும் கண்களும் திறக்கப்படவில்லை.  சூழ்ச்சிகள்  தொடர்கின்றன. சூழ்ச்சிக்காரர்களுக்கு எல்லாம் மேலான சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் தான். எங்களால் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு அல்லாஹ்வே தீர்வை தரப்போதுமானவன். ரப்பிடம், இரவு நேரத்தொழுகைகளிலும் ஏனைய நேரங்களிலும் கையேந்தி முறையிடுவோம்.

ரிஸ்வி முப்தி உயிர்த்த ஞயிறு விசாரணைக்கு செல்லும்போது பையில் என்ன கொண்டுபோனார் என்பது பற்றி அவர் விரும்பினால் கூறலாம். அது விசாரணைக்கு சாட்சியம் அளிக்க சமுகம் சார்பாக போனாரா? தனிப்பட்ட ஆளாக போனாரா? என்பதைப்பொறுத்து இருக்கும்.

ஆனால் உலமா சபைத்தலைவர் முஸ்லிம் சமூகத்தின் தலைவராக அரசியல் மட்டத்தில் நோக்கப்படுகின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிற்காக ரிஸ்வி முப்தி அழைக்கப்ப்டுவதன் நோக்கம் சமூகத்தை நீதி விசாரணைக்கு அழைக்கும் நோக்கில் என்றே நான் கருதுகின்றேன். இருப்பினும், உலமா சபையிடம் உயிரோட்டமான நிர்வாகக்கட்டமைப்பு இல்லை என்றோ அது போதுமானதாக இல்லை என்றோதான் கருதவேண்டியிருக்கின்றது .

பொதுவாக பிரதானிகள் முக்கியமான பேச்சுவார்த்தைகள்,சந்திப்புக்களுக்கு அழைக்கப்படும்போது அந்தந்த அமைப்பின் உயர்மட்டம் கூடி அவ்விடத்தில் என்ன பேசவேண்டும்? என்ன ஆவணங்கள் எடுத்துச்செல்லவேண்டும் ? யார் யார் போகவேண்டும்? எப்படி போகவேண்டும்? என்பது பற்றி ல்கலந்துரையாடி முடிவெடுத்து அதன்படி செயற்படுவார்கள். அவ்வாறான அமைப்புக்களின் தலைவர், தான் கூட்டமொன்றிற்கு அழைக்கப்பட்டிருக்கின்றேன் என கூறிக்கொண்டு தானே எல்லாம்  (One man show) என்பதுபோல நடந்துகொள்ளமாட்டார். இதுபோன்ற சம்பவம் ஒன்று கடந்த சில மாதங்களுக்குமுன்னர் இடம்பெற்றது. உலமா சபையின் செயலாளர் கையடக்கத்தொலைபேசியை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கொண்டு சென்றது செய்தியாகியது. 

இவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் நோக்கும்போது உலமா சபைக்கு உறுதியான இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போன்றதொரு நிர்வாகக்கட்டமைப்பு இல்லை என்பது புலனாகின்றது. சமூகத்தைப்பிரதிநிதிப்படுத்தும் உலமா சபை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி சமூகம் கவனத்திற்கொள்ளவேண்டும் அல்லது சமூக வலைத்தளங்களிலும் கடைத்திண்ணைகளிலும் பேசாமல் வாய் மூடி மெளனமாக இருக்கவேண்டும். முன்னதை செய்தால் சமுகம் பயனடையும் பின்னதை செய்தால் பாவம் குறையும்.


9 கருத்துரைகள்:

Agreed but Sheik has to come out and clear his name and image of the community

Please learn how to live and how speak and how behave in a non-muslim community and among non-muslim communities..
Why do we take our community problems into public sphere ?why do we take our problem into court?
Who went to court to resolve religious disputes? Who went to court to tell about our community problems ?
These people have created a lot of problems for our community?
People know all those fanatics..

Well said brother,

Good if individual or the org could provide a clarification

Meantime, ACJU should take these feedback constructively and strengthen it as a world class org.

Having said that, our community should stop slandering. This may be according to an agenda so general Muslims should not get into the trap.

Dear Rizvi Hazrath. I know you as your student for many years. I witness how careful are in handling thinks.
Don't worry about these idiotic criticizem. Proceeds as per the strategy.

ஹல்லோ அக்பர் Rafeek முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் ஒரு மாட்டை ஒரு பீங்கான் சோற்றில் மறைக்கப்பார்க்கிறீர்கள் என்று சொலத்தோன்றுகிறது,
எமக்கு எதிரான பல சூழ்ச்சிகள் 1982 முதல் இருந்த ஆட்சி மூலம் தோற்றுவிக்கப்பட்டு இன்று வரை தொடர்கிறது இது மறைக்கப்பட்ட உண்மை, சிலருக்கு கசப்பான உண்மையும் கூட ஆனாலும் உ.சபையும் உடந்தை என்பதற்கு பல ஆதாரங்கள் வெளிவந்தமை அறிவுள்ள மக்கள் அறிவர், மேலும் அமான வங்கியின் உரிமையாளர்கள் அவர்களின் பங்கின் அளவு என்ன என்று தேடிப்பாருங்கள்(வெளியே கசியும் அப்போது பார்க்கலாம்)

எது எப்படியோ வட்டிலப்பம் கொண்டு போனது உன்மையோ பொய்யோ சரியோ பிழையோ அதுவல்ல பிரச்சினை இனவாதிகள் இவ்விடயத்தினை கையில் எடுத்து பெரும்பாண்மை சமூகத்தை பிழையாக வழி நடாத்தலாம் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டைச் சுமத்தலாம் எனவே இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பது முப்தியினதும் ஜம்யத்துல் உலமாவின் கடமையாகும் இல்லையா?

அரசியல் கட்சிகள் சமூகத்தில் உள்ள சிறு சிறு குழுக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஆனால் உலமா சபை ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரநிதித்துவம் செய்யும் சபை என்பதினால் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் எதற்கும் முகங்கொடுக்கும் வல்லமை பொருந்தியவர்கள் இச்சபையில் இருக்க வேண்டும். சமயக் கல்வி நிபுணர்கள் ஒரு குழுவாக இருப்பதோடு உலகக் கல்வியல் நிபுணர்கள் குழுவொன்றும் நிச்சயமாக இருக்க வேண்டும். இதன் தேவை வெளிப்படையான இலகுவான தர்க்கமாக இருந்தாலும் ஏன் நடைமுறைக்கு வரமுடியாதிருக்கின்றது என்பது புரியாத புதிராக உள்ளது.

ரிஸ்வியடைய மறைவான இடங்களுக்குள் நாங்கள் எமது மூக்கை ஒரு போதும் நுழைக்க மாட்டோம்.

We respect ulmas. But, in our view, As Sheik Rizivi Mufthi is not fit for leading Ulama Sabha. He is more suitable for leading Thablik Jamaath.

He and his supporters are misusing Islam and hadeeth in wrong way to retain his post. It is advisable for him to resign the post and hand over it to a pious competent person. Jaffna Muslim should stop giving banner to him

Post a comment