Header Ads



சஹ்ரானையும், அவனது தம்பியையும்கைது செய்ய முடியாததற்கு சில அரசியல் தலையீடுகளே காரணம்


காத்தான்குடி அல்லியார் சந்தியில் இடம்பெற்ற மோதலின் பின்னர் பொலிஸாரால் சஹ்ரான் ஹீசிமை கைது செய்ய முடியாமல் போனமைக்கு சில அரசியல் தலையீடுகளே காரணமாக அமைந்தாக பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹசீம் மற்றும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பாக ஆலோசனைகளை பெறுவதற்கு குற்றத்தடுப்பு பிரிவால் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட இரண்டு கோப்புகள் குறித்து ஆணைக்குழுவில் நேற்று விசாரிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நேற்று (05) ஆணைக்குழு விசாரித்ததுடன் இதன்போது குறித்த ஆவணங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அரச சட்டத்தரணி மலிக் ஹயீஸிடம் கண்காணிப்பு அதிகாரியாக கடமையாற்றிய பிரதி சொலிசிட்டர் நாயகம் அசாத் நவாவி சாட்சியம் வழங்கினார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அவரிடம் குறித்த ஆவணத்தை மலிக் ஹயீஸிடம் கையளித்த பின் அது தொடர்பில் தேடி பார்த்தீர்களா? ஏன வினவியது.

இதற்கு பதிலளித்த அவர் ´இல்லை, தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு ரூன்று வாரங்களாயும் அது குறித்து தேடி பார்க்கவில்லை. காரணம் நான் அந்த சந்தர்ப்பத்தில் உயர் நீதிமன்றத்தில் 500 வழக்குகளையும், சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான 3000 வழக்குகளுக்கும் பொறுப்பாக செயற்பட்டேன்´ என்றார்.

மற்றப்படி குற்றத்தடுப்பு பிரிவால் அனுப்பப்பட்ட முதலாம், இரண்டாம் மனுக்களில் குறிப்பிடதக்க ஆலோசனைகளை முன்வைக்கும் அளவுக்கு விடயங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் கூறினார்.

இதனையடுத்து சஹ்ரான் ஹசிம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிர்வகிக்கப்பட்ட மற்றுமொரு ஆவணம் குறித்து பிரதி செலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் சட்சியம் அளித்தார்.

´நீதிபதி அவர்களே காத்தான்குடி பகுதி மௌலவி ஒருவர் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் ஊடாக முஸ்லிம் பிரிவினைவாத செயற்பாடுகள் குறித்து கடிதம் மூலம் குறிப்பிட்ட தரப்பினரை தெளிவுப்படுத்தியதாக´ கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், சஹரானையும், ரில்வானையும் கைது செய்ய முடியாமல் போனதற்கான விசேட காரணம் எதுவும் உண்டா என வினவினார்.

இதற்கு சில அரசியல் தலையீடுகளே காரணமாக அமைந்தாக பிரதி செலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.