Header Ads



இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், இலங்கையிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் - சுமந்திரன்


(நா.தனுஜா)

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது நாட்டிலேயே அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். அதில் விஞ்ஞானபூர்வமாக எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. அந்த உரிமையைத் தடுப்பதென்பது தவறானதாகும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களுக்கான இறுதிக்கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவான மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருந்தமையைத் தொடர்ந்து, அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறான கோரிக்கையொன்றை அரசாங்கம் முன்வைத்திருப்பது தொடர்பில் எதிரணியினரின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள முற்பட்டபோது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தனர்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

'முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எமது நாட்டிலேயே அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். அதில் விஞ்ஞானபூர்வமாக எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. உலகில் 189 நாடுகளில் சடலங்கள் புதைக்கப்படுகின்றன. இலங்கையில் மாத்திரமே புதைக்கப்படுவதில்லை. எனவே அந்த உரிமையைத் தடுப்பதென்பது தவறானதாகும்' என்றார்.

2 comments:

  1. வாழ்த்துக்கள் பா.உ அவர்களே.

    ReplyDelete
  2. Thank you sir.You are a very reasonable and outspoken parliamentarian and a just leader.May you live longer.

    ReplyDelete

Powered by Blogger.