Header Ads



"இலங்கை முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளுக்கும் உரித்துடையவர்களாவர்"


ஹப்ஸா ளரீஃப் (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். 

மனிதன் என்றாலே அவன் இவைகளன்றி வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். 

இந்த உரிமைகளை மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன.

இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உளவலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. 

மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. 

மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.

அடிப்படை மனித உரிமைகள் :

எவை அடிப்படை மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள்  சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 

ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன.

 பின்வருவன இப்படி பல வெளிப்படுத்தல்களில் அடிப்படை மனித உரிமைகளாக கருதப்படுவையாகும்.

வாழும் உரிமை, சமயச் சுதந்திரம், நேர்மையான விசாரணைக்கான உரிமை, பண்பாட்டு உரிமை, தனி மனித உரிமை என்பன இன்று சிந்திக்கப்படவேண்டியவையாகும்.

உதாரணமாக, இலங்கை முஸ்லிம்கள் மேற்சொல்லப்பட்ட அனைத்து உரிமைக்கும் உரித்துடையவர்களாவர்; அப்படியாயின், வாழும் உரிமையைப் பெற்றிருப்பதைப் போன்று, எமது சமயச் சுதந்திரமான நல்லடக்கம் என்பதையும் அதனை நீதிமன்றில் நேர்மையாக விசாரணைக்குட்படுத்தி, எமது பண்பாடான நல்லடக்கம் என்ற ஒவ்வொருவரின் தனிமனித உரிமையைப் பெற்றுக்கொள்ள இயலாதுள்ளமைக்கு என்ன காரணம்? மனித, தனிமனித உரிமை இல்லையா? அல்லது இன்னும் அது பற்றி அதிகார வர்க்கம் சிந்திக்கவில்லையா? அல்லது இனவாதம் மனித உரிமையை வென்றுவிட்டதா?

2 comments:

  1. This shoul be published in Sinhala media's.

    ReplyDelete
  2. Correct but this message published in sinhala language so other community could be understand

    ReplyDelete

Powered by Blogger.