Header Ads



இலங்கையில் உடல்கள் எரிப்பு - சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் பிரித்தானிய முஸ்லீம் கவுன்சில்

- கார்டியன் -

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் அவர்களது மத நம்பிக்கைக்கு அப்பால் தகனம் செய்யவேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக பிரித்தானியாவின் முஸ்லீம் கவுன்சி;ல் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற வற்புறுத்தல் நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை அரசாங்கம் கட்டாய தகனம் என்ற கொள்கையை மார்ச் மாதத்தில் பின்பற்ற தொடங்கியது.

இந்த மாதம் கொரோனாவினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் உடலை அதிகாரிகள் குடும்பத்தினரின் விருப்பமின்றி தகனம் செய்தனர்.

குழந்தையின் தந்தை தன்னால் அதனை பார்க்கமுடியவில்லை என தெரிவித்தார்.

அவர்கள் எனது குழந்தையை எரிக்கும் இடத்திற்கு என்னால் செல்ல முடியாது என அல்ஜசீராவிற்கு தெரிவித்த எம்எவ்ம் பாஹிம் பெற்றோர் சம்மதம் வழங்காத நிலையில் எப்படி குழந்தையை தகனம் செய்தீர்கள் என எனது குடும்பத்தவர்களும் நண்பர்களும் அதிகாரிகளிடம் குரல் கேள்வி கேட்டனர் என தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய முஸ்லீம் கவுன்சில் நியமித்துள்ள செயலணியொன்று உடல்களை பலவந்தமாக தகனம் செய்யும் கொள்கையை இலங்கை கைவிடவேண்டும் என கோரி இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

இதன் காரணமாக முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வன்முறையை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அவசியமான சட்டநடவடிக்கையை எடு;க்கப்போவதாக முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் முஸ்லீம்களின் உடல் கட்டாயமாக தகனம் செய்யப்படுவது சிறுபான்மை இனத்தின் மத உரிமைகளை மோசமாக பாதிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ள பின்ட்மன்ஸ் என்ற சட்டநிறுவனத்தின் டயாப் அலி இது உரிய காரணமில்லாத பட்சத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் வழங்குவதை தாமதப்படுத்துவது பாரதூரமான உரிமை மீறல் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தருணத்தில் உடல்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை எந்த காரணமுமின்றி இலங்கை அதிகாரிகள் மீறிவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அப்பால் இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் வேகமாக காரணமற்ற மனு நிராகரிப்பு உள்நாட்டில் இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான வழியெதுவும் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Good. More such actions from International Groups are needed. Hope the Govt. will take note of what the country will have to face if the Govt. does NOT Change its Irrational and Totally Unacceptable policy on Cremation of the janaaza of Muslims who die of Covid-19.

    ReplyDelete

Powered by Blogger.