Header Ads



ஒதுக்கப்பட்ட நிலையில் மைத்திரி...?


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசின் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கப்படாமை குறித்து அதிருப்தி கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், சுற்றாடல் அமைச்சருமான மஹிந்த அமரவீர இதனை பொகவந்தலாவையில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோது தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

இந்த விவகாரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றோம்.

கடந்த காலங்களாக எழுந்த இந்தச் சர்ச்சைக்கு விரைவில் தீர்வு முன்வைக்கப்படும் என்று நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நாட்டு மக்களின் சொத்துக்களை பயங்கரமாகக் கொள்ளையடித்து அதனைப் பாதுகாத்துக் கொள்ள பெரும் கள்வர் கூட்டத்துடன் பேச்சுவர்த் தை நடாத்தியாக வேணடும். பொதுமக்கள் தனிப்பட்டமுறையிலாவது இவனுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சிறையில் தள்ளி பலநூறுமக்களை அநியாயமாகக் கொலை செய்து அடித்த கொள்ளைக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. Bus pona pinbu kai kaatraaha

    ReplyDelete

Powered by Blogger.