Header Ads



"ஜனாஸா விவகாரத்திற்கு மாத இறுதிக்குள், சாதக முடிவு ஏற்படுமா...?"


கொரோனா வைரஸால் மரணிப்பவர்களை புதைக்கும் விவகாரத்திற்கு தீர்க்கமான முடிவு காணப்பட வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

காலி நீதிமன்ற கட்டடத் தொகுதி பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நேற்று காலிக்கு விஜயம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து கொரோனா பரவலினால் மரணிப்பவர்களின் சடலங்களை பாதுகாத்து வைக்கும் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

கொரோனா மாரணங்களை புதைப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. மருத்துவர்கள், நிபுணர்கள் போன்றோரின் கருத்தை பெற்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தையூடான சாதகமான முடிவின் நிலைபாட்டிலேயே நான் இருக்கிறேன்.

கொரோனா பரவலினால் மரணிப்பவர்களின் சடலங்களை குளிர் அறைகளில் வைப்பது தொடர்பில் பிரச்சினையிருந்தால் சுகாதார அமைச்சு அது      தொடர்பில் நடவடிக்கை எடுக்கும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரண உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அடக்கம் செய்ய அனுமதி கோரும் விடயத்தை மனிதாபிமான ரீதியில் மீளாய்வு செய்யுமாறு நிபுணர்குழுவிற்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண கூறியிருந்தார்.

இந்த நிலையில் நிபுணர் குழுவிற்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிற்குமிடையில் நேற்று அமைச்சில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றதாக அறியவருகிறது.

இதேவேளை இந்த மாத இறுதிக்குள் இந்த விடயம் தொடர்பில் சாதகமான முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.(பா)

ஷம்ஸ் பாஹிம்

No comments

Powered by Blogger.