Header Ads



'தீ பந்தம் ஏந்தி போராட்டம்'


அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்ப்பாட்டிற்கு எதிராக "அமைதியான போராட்டம்” ஒன்று இன்று (07) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

அரசாங்கம் அடக்குமுறை மற்றும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதன் விளைவாக மகர சிறைச்சாலையில்  பல கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை இன்னும் அரசாங்கம் வெளியிடவில்லை என்றும், இது குறித்து எதுவும் தெரியாத அவர்களது உறவினர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 மனித உரிமைகள் மற்றும் மனித தேவைகள் மீறப்படும் சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளது என்றும், இந்த அடக்குமுறைக்கு எதிராக ஒரு எதிர்க்கட்சியாகவும், ஐக்கிய மக்கள் சக்தியாகவும் போராடுவேன் என்றும் அவர் கூறினார்.





2 comments:

  1. Not enough strong...need more

    ReplyDelete
  2. எஸ்.ஜே.பியால் மக்களை அரசியல் ஏமாற்றும் உச்சம். ரிமாண்ட் சிறையில் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள். முஜீபு ராகுமான் இந்த வாய்ப்பை குடும்ப உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்க பயன்படுத்துகிறார், எனவே அவர் அடுத்த பொதுத் தேர்தலில் ஏமாற்றுவதன் மூலம் அவர்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று அவர் நினைக்கிறார்.
    இந்த ரிமாண்ட் செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்கலை
    ஆதரிப்பதற்காக இந்த எம்.பி.க்கள் அனைவரும் 50% சம்பளத்தையும் சலுகைகளையும் அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளை ஆதரிக்க ஏன் வழங்கக்கூடாது?இதைச் செய்யாதது மீண்டும் முஜீபு ராகுமான் (காசிம் காக்காவின்) ஏமாற்றும் அரசியலாக மாறுகிறது.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.