Header Ads



கொரோனாவால் மரணித்தவர்கள் ஷஹீதுகளாவர்...!


"ஷுஹதாக்கள் ஐந்து வகையினர்: கொள்ளை நோயால் இறப்பவர், தாயின் வயிற்றில் இறப்பவர், நீரில் மூழ்கி இறப்பவர், இடிபாடுகளில் இறப்பவர், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு இறப்பவர்."  

(புஹாரி)

அபூஹுரைரா (ரழி)

ஒரு முறை இறைதூதர் (ஸல்) தனது தோழர்களிடம் ஷஹீத் யார்ரென அறிவீர்களா என வினவ இறைபாதையில் போராடி கொலை செய்யப்பட்டவர் என ஒருவர் பதில் கூறினார், அப்போது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள்  அப்படியாயின் எனது உம்மத்தில் ஷுஹதாக்கள் குறைந்த எண்ணிக்கையினராவர், அவ்வாறல்ல கொள்ளை தொற்றில் இறப்பவர், தாயின் வயிற்றில் இறப்பவர், இடிபாடு அனர்த்தங்களில் இறப்பவர், நீரில் மூழ்கி இறப்பவர் என விபரமாக கூறினார்கள்.

(முஸ்லிம்)

அபூ ஹுரைரா (ரழி)

இவ்வாறான ஹதீஸ்களுக்கு விளக்கம் சொல்லிய முஹத்திஸீன்கள் ஷுஹதாக்கள் அல்குர்ஆனிலும் ஸுன்னாஹ்விலும் குறிப்பிடப்பட்டுள்ள பண்புகளை கருத்தில் கொண்டும் ஸஹாபாக்களின் புரிதலை இறைதூதர் ஸல் அவர்கள் அங்கீகரித்தமையை கருத்தில் கொண்டும் ஷஹீதுகளை பல படித்தரங்களாக விபரித்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில்  தர்ம யுத்தங்களில் போரிட்டு மரணிப்பவர்கள் முதற் தரத்திலும் ஏனையவர்களுக்கு அடுத்தடுத்த தரங்களிலும் வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

அதாவது முதலாமவருக்குரிய அந்தஸ்த்து தான் அடுத்தவர்களுக்கு தரப்படுகிறது, இறுதிக்கடமைகளைப் பொறுத்தவரை முதலாமவருக்கு பர்ழு கிபாயாவான கடமைகள் கட்டாயமாவதில்லை, ஏனைய ஷஹீதுகளுக்கு அவை கடமையாகின்றன, ஆனால் அவற்றை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் இயன்றவரை தான் நிறைவேற்றுதல் வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்றால் மரணிப்பவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றோ அல்லது பலவந்தமாக எரிக்கப்படுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள், வேதனைக்கு ஆளாகிறார்கள் என்றோ தப்பபிப்பிராயங்களில் துயரம் கவலை கொள்ளலாகாது, மாறாக அவர்களுக்கு இரட்டிப்பு ஷஹாதத் கிடைக்கிறது, ஒன்று கொள்ளை நோயிற்கானது அடுத்து அநீதியிற்கு ஆளாவதற்கானது.

அதேவேளை கொள்ளை நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளாது உரிய சுகாதார நடைமுறைகளை பேணாது, பரிசீலகளை சிகிச்சைகளை மேற்கொள்ளாது  தாமும் நோய்த் தோற்றுக்கு ஆளாகி பிறருக்கும் அதனை பரவச் செய்வோர் விடயத்தில் விடயம் மாறுபட்டதாக இருக்கும் அது தற்கொலை கொலை குற்றங்களை இழைத்து விடுவதற்கு சமனாகும்.

ஒருவர் தனது உயிர், பொருள், மானம் என்பவற்றிற்காக சண்டையிட்டு அதில் மரணித்தாலும் ஷஹீதுடைய அந்தஸ்த்து தரப்படுகிறது என இறைதூதர் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அநீதி அக்கிரமங்கள் ஆக்கிரமிப்பு போர்களுக்கு அடக்கு முறைகளுக்கு ஆளாகி  கொல்லப்படுபவர்கள் மரணிப்பவர்கள் கூட ஷஹீதாக்கப்படுபவர்கள் என்று இஸ்லாம் கூறியிருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த கொள்ளை நோயிலிருந்து எம்மையும் எம் தேசத்தையும் உலக மக்களையும் காத்தருள்வானாக, கொள்ளை நோயை அரசியலாக வியாபாரமாக அடக்குமுறைகளாக கையாள்வோர் மீது அவனது அத்தாட்சிகளை காட்டுவானாக.

நோய் தோற்றிற்கு ஆளானோருக்கு பூரண சுகத்தை வளங்குவானாக, வபாஃத் ஆனோருக்கும் பலவந்தமாக ஏரியூட்டப் படும் ஷுஹதாக்களுக்கும் பர்ஸக் உடைய வாழ்வை உயரிய சுவனத்தின் செளகரியங்கள் செளபாக்யங்கள் நிறைந்ததாக ஆக்கிவிடுவானாக.

Inamullah Masihudeen

1 comment:

  1. கற்றவர்கள் உறங்குவது கல்லாதோர் இரவு முழுவதும் நின்று வணங்குவதிலும் மேலானது. என்பதற்கு இக்கட்டுரை அத்தாட்சி.

    ReplyDelete

Powered by Blogger.