Header Ads



அரசாங்கத்திற்கு ஆதரவான குணவன்ச தேரருடன் சஜித் சந்திப்பு


இன்று (15) கொழும்பு தர்ம நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எல்லே குணவன்ஸ தேரோவை சந்தித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நல்லொழுக்கத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஒரு சமூக-கலாச்சார மறுமலர்ச்சியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவருக்கு நினைவூட்டியதோடு அதற்கான அவரது ஆசீர்வாதங்களைக் கோரினார்.

நல்ல செயல்களுக்கான ஆசீர்வாதங்களை தாம் எப்போதும் வழங்குவதாக கூறிய எல்லே குணவன்ச தேரர், நல்லொழுக்க இயக்கம் குறித்த தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவையும் அவர் நினைவு கூர்ந்தார், அவர் ஒரு மக்கள் தலைவர் என்றும் கூறினார்.

அவரும் இனவெறிக்கு எதிராக போராடுவார் என்றும் இந்த நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்றும் கூறினார்.

அரசியல் சாராத புலமைத்துவ ஆலோசனை மற்றும் மனித வளங்கள் மூலம் நாட்டின் முன்னேற்றம் குறித்து தாம் ஆலோசனை பெற்று வருவதாகவும், அவர்களின் பங்களிப்பு ஒரு பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர் அவர்களையும் நாட்டிலும் விழிப்புனர்வை ஏற்படுத்துவதற்காகவும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நினைவு கூர்ந்தார்.

கொரோனா பேரழிவு குறித்து பலரும் அன்று அறிந்திருக்கவில்லை என்றும்,எதிர்க் கட்சியாக அவர் முதலில் நாட்டிற்கு கூறியதை நினைவுபடுத்தி,இன்று உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்து விசாரித்து வருகிறது, ஆனால் நம் நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது, என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது அரசியல் சக்தியின் அபிலாஷை இனம், மதம் போன்ற குறுகிய பிளவுகளிலிருந்து விடுபட்டு ஒரு நாட்டில் சகோதரத்துவத்தில் வாழ்வதே என்றும், பிரிவினவாதம் நாட்டிற்கு ஒருபோதும் பயனளிக்காது என்றும் கூறினார்.

புலமை,அறிவு, தகவல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பயணம் எடுக்கப்பட வேண்டும் என்பது அவரினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்றும், அதற்காக மகா சங்கத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் அவசியம் என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. அடுத்த இனவாத நகர்வுக்கு அஸ்திவாரம் இது!சஜித் தீட்டும் மாஸ்டர் பிளான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வைத்து ஐக்கிய மக்கள் கூட்டணி என்று போடும் திட்டம்.முஸ்லீம் காங்கிரஸ்,அ இ ம க,தமிழ் முற்போக்கு கூட்டணி போன்றவற்றை சேர்த்துக்கொண்டு தலைவர் : சஜித் - பிரதி தலைவர் :சம்பிக்க ரணவக்க - செயலாளர் : சரத் பொன்சேகா - தவிசாளர்:ராஜித சேனாரத்ன.இங்குதான் முஸ்லிம்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்! இந்த இனவாத அரசாங்கத்தின் நிழல் தான் சஜித் சென்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் யார் பிரதமர் என்ற ஊடகத்தின் எந்த ஒரு கேள்விக்கும் சஜித் பதில் சொல்லவில்லை காரணம் பிரதமர் தெரிவிக்கு சஜித் தேர்வு செய்தது பாட்டாளி சம்பிக்க ரணவக்க - பாதுகாப்பு அமைச்சர் - சரத் பொன்சேகா. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் மாகாண சபை தேர்தலுக்கு சிறுபான்மை மக்கள் மீது போடும் சதிகார வலை! சஜித்துக்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரிதாக எந்த ஒரு பெயர் இல்லை காரணம் தலைமத்துக்கு உண்டான ஆளுமை இல்லை கட்சியிலும் கூட சொந்த ஊர் ஹம்பாந்தோட்டை அங்கேயே படும் தோல்வி! ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியில் பிளவு கட்சியின் உள்விவகாரங்களில் சஜித் மனைவி அதிகாரம் செலுத்துகிறாள் என்று. உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கோ தெரியாது ! 3 முஸ்லீம் பல்கலைக்கழகம் மாணவர்கள் புராதன சின்னம் மீது ஏறி புகைப்படம் எடுத்தார்கள் என்று கைது செய்ய பட்டார்கள் அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் நிரபராதி என்று நீதிமன்றம் விடுதலை செய்ததட்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அவர்களுக்கு பிணை வழங்காமல் கைது செய்ய சொன்னது இதே இனவாதி சஜித் தான்! இவனை கொழும்பு கொண்டு வந்து பம்மாத்து காட்டினது முஜிபுர் ரகுமானும் - மனோ கணேசனும் தான் இவன் வீடமைப்பு அமைச்சராக இருக்கும் பொழுது கொடுத்த வீட்டில் எத்தனை தமிழ் பேசும் குடும்பம் இருந்தது என்று மனோ -முஜிபுர் சொல்லுவார்களா? அதனால் முஸ்லிம்கள் அடுத்த தேர்தலை வாக்களிக்காமல் புறக்கணித்தாலும் எந்த ஒரு நஷ்டமும் இல்லை.இந்த பாரிய திட்டம் நிறைவேறாதான் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து சம்பிக்க விலகியது. சரத் பொன்சேகா:சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் வாழ தகுதி இல்லாதவர்கள் என்று சொன்னவன்.முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களியுங்கள் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டின கதையாக நாம் இருக்க கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.