Header Ads



ஜனாதிபதியும், அரசாங்கமும் நாட்டிலிருந்து கொரோனாவை ஒழிக்க சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் - பாதுகாப்பு செயலாளர்


நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை சுகாதாரவழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் நோய் தொடர்பான தகவல்களை மறைக்கவேண்டாம், எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூகநிகழ்வுகளில் ஒன்றுகூடுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் வீடுகளில் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவேண்டும் எனவும் பாதுகாப்பு செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் முப்படையினரும் சுகதாரஅதிகாரிகளும் நாட்டிலிருந்து கொரோனாவை ஒழிப்பதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் என கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பகுதியை அடையாளம் கண்டபின்னர் சுகாதார அதிகாரிகளும் புலனாய்வு பிரிவினரும் நோய் எவ்வாறு பரவுகின்றது என்பதை கண்டுபிடித்து அதனை தடு;ப்பதற்கான நடவடிக்கைகளை எடு;க்கின்றனர் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அதனை பின்னர் அந்த பகுதியை முடக்குவதற்கு தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

முதல்தொற்றாளரை அடையாளம் கண்டு பரவலை தடுப்பது மாத்திரம் எங்கள் இலக்கல்ல என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள்ஐந்தாவது ஆறாவது தொற்றாளரையும் அடையாளம் காண்கின்றோம் அதன்மூலம் தொற்றிற்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்புவதுடன் அவர்களின் நெருங்கிய சகாக்களை தனிமைப்படுத்துகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.