Header Ads



ஜனாசாக்களை தகனம் செய்வதில், அரசியல் தலையீடு இல்லை - அறிக்கை சமர்ப்பிக்க பிரதமர் உத்தரவு - யோசித


கொரோனாவைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை அரசியல் தலையீடுகள் காரணமாக எடுக்கவில்லை என யோசித ராஜபக்ச டெய்லி மிரரிற்கு தெரிவித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வது குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்கா நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை கூடிய விரைவில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார் என யோசித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிபுணர்கள் குழு உட்பட சுகாதாரஅதிகாரிகளின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின் அடிப்படையிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதவிவகாரங்களுக்கான அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த நாட்டில் அனைத்து மதங்களினதும் உரிமைகளை மதிப்பது என்ற விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்ற உத்தரவாதத்தை பிரதமர் வழங்குகின்றார் என தெரிவித்துள்ள யோசித ராஜபக்ச அவர் சுகாதார அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்,அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விவகாரத்திற்கு பிரதமர் தீர்வை காண்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..


3 comments:

  1. பிரதமர் காரியாலய உத்தியோகஸ்தர்களின் தலைவர் யோசித ராஜபக்ஸ அவர்கள் சுகாதார நிபுணர் குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.எனவே முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு உடனடித்தீர்வு கிடைக்குமாம்.

    ReplyDelete
  2. Yaar Yaaro pesuraangappa...!!!

    ReplyDelete
  3. Mr. Yositha Rajapaksa, I need to think twice before writing this comment. There are approximately 195 countries in the world. Of these, 194 countries have put into practice the GUIDELINES of WHO that relative can do whatever they want to do with their corpses. Even countries with higher groundwater level than Sri Lanka bury corpses. Are the experts in Sri Lanka supposed to be superior to the world experts? You can do anything with the power you currently have. But time is not always the same. Humans will not be able to bear the consequences when times change. I did not tell this but history says.

    ReplyDelete

Powered by Blogger.