எமது பொருளாதரத்தை தேசிய ரீதியில், சவால்களை வெற்றிகொள்ளும் வரவு செலவு திட்டத்தையே அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நாம் முன்வைத்துள்ளோம், மக்களுக்கான எதுவுமே இல்லை என்ற விமர்சனத்தை தாண்டி தேசிய பொருளாதாரதத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் வரவு செலவு திட்டத்தை பார்க்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
எமது அரசாங்கம் பாரிய கடன் நெருக்கடியில் சிக்கும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் செலுத்தப்படாதிருந்த கடன்களையும் சேர்த்து நாம் செலுத்தியுள்ளோம். இவற்றில் வெளிநாட்ட கடன்களுக்கு பதிலாக தேசிய கடன்கள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதம் இடம்பெற்றது நிலையில் வரவு செலவு திட்ட நன்றியுரையாற்றிய பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்தார், அவர் மேலும் கூறுகையில்,
ஏனைய வரவு செலவு திட்டங்களில் இருந்த நோக்கம் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை, தேசிய ரீதியில் எமது விவசாயம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அதன் மூலமாக இவ்வாறான நெருக்கடிகளை கையாளவே நாம் இந்த வரவு செலவு திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
இந்த வரவு செலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு எதுவுமே வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், நாம் எந்த நேரத்திலும் இலவசமாக பணம் பங்கிடும் வேலைத்திட்டங்களை உருவாக்கவில்லை. அடுத்த தேர்தல்களை இலக்குவைத்து எந்தவொரு திட்டமும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை,
அதனால் நாம் வரியை குறைத்திருந்தோம். அரசாங்கம் வரியை பெற்றுக்கொள்ள வர்த்தங்கள் வெற்றிகரமாக இயங்க வேண்டும். வரி குறைப்பால் அரச வருமானம் வீழ்ச்சியடைவில்லை.
2020ஆம் ஆண்டின் கணக்கிடப்பட்ட அரச வருமானத்தில் 75 சதவீதத்தை முதல் 10 மாதங்களில் பெற்றுக்கொள்ள முடிந்தது. கொவிட் தொற்றுக் காரணமான ஏற்றுமதிகள் குறைவடைந்திருந்த போதிலும் அரச வருமானம் 1200 பில்லியன்வரை பெறப்பட்டுள்ளது. சிக்கலான வரிக் கொள்கைகளுக்கு பதிலாக எளிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினோம். நாட்டை கட்டியெழுப்பும் வரி உட்பட பல வரிகளை நாம் முற்றாக நீக்கியிருந்தோம். சிகரட்,மதுபானம், சூதாட்டம், வாகனங்கள் என பலவிடயங்களுக்கு தனி தனியாக இருந்த வரி முறைகளுக்கு பதிலாக பொருட்கள் மற்றும் சேவைகள் என்ற தனியார வரி முறைமையை அறிமுகப்படுத்திருந்தோம். ஒன்லைன் மூலம் வரிகளை செலுத்த நடவடிக்கைகள எடுத்துள்ளோம்.
எமது சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகதான் இக் கடன்களை எம்மால் செலுத்த முடிந்தது. கொவிட் தொற்றுக் காரணமாக தினமும் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக அரச செலவுகள் உள்ள போதிலும் கடன்களை செலுத்தியுள்ளோம். தேவையானவைக்கு பதிலாக தேவையற்ற அதிகமான பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. அவற்றை கட்டுப்பத்தினோம். அதனால் எமது பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் வரவேற்றனர். விவசாயிகளும் வர்த்தகர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எமது ஏற்றுமதி பொருளாதாரம் அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமாகும் போது ஏற்றுமதி வருமானம் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. 2019ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது அது 4.3 சதவீதம் அதிகரிப்பாகும். கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் ரூபாயின் பெறுமதியை எம்மால் பேண முடிந்தது. எமது நோக்கில் உள்ள சாதகமான காரணிகளால் இது சாத்தியமானது. உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு சாதகமான காரணிகளே இதன்மூலம் எமக்கு தெளிவாகியுள்ளது. கொவிட் நெருக்கடிக்கு மத்தியிலும் ஏற்றுமதியை அதிகரிக்க முடிந்துள்ளது.
இறக்குமதியை கட்டுப்படுத்தி தேசிய செலுத்தல்களை அதிகரித்து அந்நிய கையிறுப்பை பேண முடிந்துள்ளது. இதுதான் நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டிய பாதை. கொவிட் தொற்று எமக்கு கற்றுக்கொடுத்த பாடம்தான் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்க வேண்டுமென்பது.
வரி கொள்கையின் ஸ்திரத்தன்மையால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் அறிமுக்கப்படுத்தியிருந்த வரிக்கொள்கை மிகவும் அவசியம் என்பதை கொவிட் தொற்று நெருக்கடி உணர்த்தியிருந்தது. 2025ஆம் ஆண்டாகும் போது வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறையை தேசிய வருமானத்தில் 4.0 சதவீதமாக குறைப்பதே சுபீட்சமான நோக்கு என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதான் எமது இலக்கும். வரவு – செலவுத் திட்ட விவாத்தில் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்ட ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிப்பதுடன் அனைவரினதும் கருத்துகள்மீது அவதானம் செலுத்தப்படும் என்றார்.
0 கருத்துரைகள்:
Post a comment