Header Ads



பன்னூலாசிரியர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பாரின், மறைவுக்கு முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்


பிரபல கிரிக்கட் வர்ணனையாளரும் மூத்த ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலைதைத் தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த அப்துல் ஜப்பார் அவர்கள் கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார். நீண்ட காலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல தமிழ், முஸ்லிம் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அவர், குறிப்பாக நாடகத் துறையில்  சிறப்பான பங்களிப்பு நல்கியிருந்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களுடன் நெருங்கிப் பழகிய இவர், அவருடன் இணைந்து பல வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கட் நேர்முக வர்ணனையில் பல தனித் தமிழ்ப் பதங்களை அறிமுகப்படுத்தி உலகப் புகழ் பெற்றார். கருத்தாழமிக்க பல நூல்களை எழுதியுள்ள மூத்த ஊடகவியலாளர் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்கள், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பற்றிய ஆங்கில நூலொன்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்நூல் கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்காமுஸ்லிம் மீடியா போரத்தின் நிகழ்வொன்றில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையொன்றையும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் தமிழ் வானொலி விருது, இலங்கை அரச விருது உள்ளிட்ட பல விருதுகளைப் வென்ற அவர், தமிழ் நாடு இஸ்லாமிய இலக்கியக் கழகத் துணைத் தலைவராகவும் தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார். அப்துல் ஜப்பார் அவர்கள் மரணிக்கும் வரை சமய, சன்மார்க்க, கல்வி, சமூகப் பணிகளிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயலாற்றி வந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மறைந்த அப்துல் ஜப்பார் அவர்களை இறைவன் தன் நல்லடியார்கள் குழுவில் சேர்த்து உயர் சுவனப் பாக்கியத்தை நல்குவானாக!

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வல்ல இறைவன் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக!


என்.எம். அமீன்

தலைவர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

22.12.2020

6 comments:

  1. அட்டைப்படம் தவறான அர்த்தத்தை கொடுக்கின்றது ... மீடியா போரம் அல்லது jaffna இணையதளம் வேறு பொருத்தமான படம் போடுவது சிறந்தது...

    ReplyDelete
  2. What is the connection to the picture posted for this article?

    Prabhakaran killed many Muslims in the east and expelled Muslims from north of the country. But posting this picture tells bad story to us..

    ReplyDelete
  3. வேறு புகைப்படம் கிடைக்கவில்லையா?

    ReplyDelete
  4. இந்தப் படம் முக்கியமா

    ReplyDelete
  5. பல்துறை ஆழுமை மிக்க தமிழக தமிழ் அன்பர் சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் மறைவு உலகத் தமிழர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் வாழ்வு நமக்கெல்லாம் வழிகாட்டும்.


    ReplyDelete

Powered by Blogger.