Header Ads



கொரோனாவினால் உயிரிழப்பவர்களை அடக்கம்செய்ய, வறண்ட நிலப்பரப்பை தெரிவுசெய்ய பிரதமர் ஆலோசனை


- பிரதமர் ஊடக பிரிவு -

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அதிகாரிகளுக்கு இன்று (12) வியாழக்கிழமை ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொவிட்-19 நோயினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையிலான விசேட கூட்டமொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுகாதார துறை பிரதானிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த கூட்டத்திலேயே மேற்குறிப்பிட்ட ஆலோசனையினை பிரதமர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் தெரிவித்தனர்.

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர்.


7 comments:


  1. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்த அறிக்கை உண்மையாகவே செல்கிறது. இதில் எந்த மாற்றமும் வராது. இதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இந்த பேச்சுக்கள் அனைத்தும் முஸ்லீம் மந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முஸ்லீம் வாக்காளர்களிடையே தங்கள் அரசியல் மதிப்பீட்டை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் நாடகங்களாகும்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".
    This statement made by the PM Mahinda Rajapaksa is going the truth. No change will come to this. Muslims should realize this. All these talks are just dramas that Muslim ministers and politicians are staging to keep their political rating among the muslim voters.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. சஹாரா பாலைவனம் ஓ.கே.யா?

    ReplyDelete
  3. ஹம்பாந்தோட்டை நல்லம்

    ReplyDelete
  4. Vada gotha ku vilakku pudikra Noor Nizam unna tanda tedi kondu irundan itanai janaza erinji,verum 20 nale ana pachilam kulandai sambal agina piragu eduvum pesama ponnayan madri irundutu ippa vakalathu vanga vandurikiya? Unakellam, vekkam, manam ilayada?unamadri samudayata kuti kudukra broker broker irukum vara muslim galuku aniyayam nadakatan seyum. Muslim Voice am manja ponayan endu un pera marthu. Pacha drogi mudalail samudayathil unamadri kati kudukra visa kirimigalatan alikanum

    ReplyDelete
  5. this is a joke ..It is to further humiliate Muslim community...

    ReplyDelete
  6. Varanda nilam.....Ieeeera nilam....Ieera nilam.... Varanda nilam..... next week again varanda nilam Ieera nilam.....boolshit

    ReplyDelete

Powered by Blogger.