December 02, 2020

மாளிகைக்காடு மையவாடி மீண்டும் கடலுக்குள், மதில் தரைமட்டம் – ஜனாசாக்கள் சிதறல்


- காரைதீவு  நிருபர் சகா -

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சக்திமிக்க தாழமுக்கம்காரணமாக ஏற்பட்ட கடற் கொந்தளிப்பினால் காரைதீவுக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் பள்ளிவாசல் மையவாடி (மயானம்) மீண்டும் கடலுக்குள் காவுகொள்ளப்பட்டுவருகிறது.

மையவாடியின் கிழக்குப்பக்க மதில் சீற்றமிகு கடலலலையால் அடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மையவாடியின் கிழக்கு பக்கம் படிப்படியாக கடலுக்குள் உள்வாங்கப்பட்டுவருகிறது. அதனால் அங்குள்ள ஜனாசாக்கள் (பிரேதம்) கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றன. மக்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாக பிரேதங்களை வேறிடத்தில் அடக்கவும் சிந்திக்கின்றனர். காலையில் பொதுமக்கள் அங்கு ஒன்றுகூடினர்.

இச்சம்பவம் இன்று அதிகாலைமுதல் இடம்பெற்றுவருகிறது.

கடந்த ஒருமாதகாலத்திற்கு முன்னரும் கடலரிப்பு காரணமாக இதே மையவாடியின் ஒருபக்க மதில் இடிந்து வீழ்ந்தது. காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் தவிசாளர் கி.ஜெயசிறில் உபதவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோர் அங்குவிரைந்து பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினர். அவர்களுடன் பேசியபின்னர் மாளிகைக்காடு அந்நூர் பள்ளிவாசல் நிருவாகத்தினரின் முயற்சியினால் மீண்டும் மதில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கென பாறாங்கற்கள் கொண்டுகுவிக்கப்பட்டிருந்த இந்நிலையில் மீதி மதிலும் நேற்றைய கடல்சீற்றத்தினால் அடித்து தரைமாக்கப்பட்டுள்ளது.

மையவாடி கடலுக்குள் உள்வாங்கப்படும் சம்பவத்தை கேள்வியுற்ற காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கடரோலரப்பாதுகாப்பு அலுவலர் எ.எம்.மகுறூப் உள்ளிட்டோர் விரைந்து பார்வையிட்டனர்.

அந்நூர் பள்ளிவாசல் பிரமுகர் எ.எம்.பைசர் நிலைமையை தவிசாளரிடமும் அதிகாரிகளிடமும் கூறினார். கல்வேலி அமைப்பது பற்றியும் இழுத்துச் செல்லப்படும் எஞ்சிய பிரேதங்களை ஒரு பாரிய குழியை வெட்டி அடக்கம் செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவுடன் தொடர்புகொண்ட பிரதேசசெயலர் நிலைமையை விளக்கினார். அவசியமான நடவடிக்கையை எடுக்குமாறு கூறிய அரசஅதிபர் தானும் வருவதாகக் குறிப்பிட்டார்.

தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவிக்கையில் மையவாடி பாதுகாப்பு விடயத்தில் இங்குள்ள மக்கள் ஒற்றுமைப்பட்டு முடிவுஎடுக்கவேண்டும். பிரிந்துநின்றால் எங்களால் எதுவும் செய்யமுடியாது போய்விடும். எனவே நீங்கள் இதற்கென ஒரு குழுவை அமைத்து செயற்படுங்கள் என்று ஆலோசனை கூறினார்.

4 கருத்துரைகள்:

எங்க தம்பிமார்

சதத்துக்கும் உதவாத உங்கள விட்டுட்டு ஊர் மக்கள் மண்மூடை அடிக்கினார்கள். இதை கன்டு தலை தெறிக்க ஓடி வந்து போட்டோ பிடிச்சி பேட்டி கொடுத்து ஆனை ஆக்குவேன் பூனை ஆக்குவேன் என்ட தம்பிமார் எல்லாம் எங்க. கொஞ்சம் வாங்க உங்க முகத்தை பார்க்க ஆசையா இருக்கு.
தூ பொறம்போக்குகளா.

மளிகை காட்டு மையவடி மூலம் எம் சமூகத்துக்கு அல்லாஹ் கட்டிய ஒரு அற்புத பாடமும் ஒரு தற்காலிக தீர்வும்...
கொரோனா மரணங்கள் தொடர்பாக...
இந்த அரசாங்கம் தடை செய்த ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக எமது பார்வை..
எம் முன்னோர் புனித ஹஜ் கடமைக்காக கப்பலில் பயணம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் அந்த கனடாவை கடலில் அடக்கம் செய்வார்கள். மேலும் தபோதய பிரச்சினை குறித்து நாம் ஒரு தீர்வாக..
கொரோன மரணங்களின் ஜனசக்களை கடலில் அடக்கம் செய்வது குறித்து ஆலோசனை செய்வது ஒரு பெரிய சமூக கவலைக்கான தீர்வாக அமையும்.
அல்லாஹ் போதுமானவன்.

மளிகை காட்டு மையவடி மூலம் எம் சமூகத்துக்கு அல்லாஹ் கட்டிய ஒரு அற்புத பாடமும் ஒரு தற்காலிக தீர்வும்...
கொரோனா மரணங்கள் தொடர்பாக...
இந்த அரசாங்கம் தடை செய்த ஜனாஸா அடக்கம் சம்பந்தமாக எமது பார்வை..
எம் முன்னோர் புனித ஹஜ் கடமைக்காக கப்பலில் பயணம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் அந்த கனடாவை கடலில் அடக்கம் செய்வார்கள். மேலும் தபோதய பிரச்சினை குறித்து நாம் ஒரு தீர்வாக..
கொரோன மரணங்களின் ஜனசக்களை கடலில் அடக்கம் செய்வது குறித்து ஆலோசனை செய்வது ஒரு பெரிய சமூக கவலைக்கான தீர்வாக அமையும்.
அல்லாஹ் போதுமானவன்.

அம்பாறை மாளிகைக்காடு பொது மக்களுக்கு என் தலைமையான வேண்டுகோல்,உங்களால் முடிந்த வரை எல்லோரும் இதை புனர் நிர்மாணம் செய்ய பண உதவி செய்யுங்கள்.செல்வந்தர்கள்,புத்தி ஜீவிகள்,இளைஞர்கள்,உங்கள் ஊரை உண்மையாக நேசிப்பர்வர்கள் பைத்துல் மால் மற்றும் கூட்டு ஸதகாவை கொண்டு!இனியும் எந்த அரசியில் வாதியையும் நம்பாதீர்கள்!அடுத்து வரும் மாகாண சபை தேர்தலில் ஓட்டு கேட்டு வரும் அரசியல் வாதிகளிடம் உங்கள் பெண்கள் பாவித்த பழைய புடவையை கையிலே கொடுங்கள் அணிய சொல்லி."ஒன்று பட்டால் உண்டு வாழ்வு "

Post a comment