Header Ads



கிளைமோர் குண்டுடன் பேருந்தில் பயணித்த கணவனும், மனைவியும் கைது - முன்னாள் உறுப்பினர்களாம் - இராணுவத் தளபதி தெரிவிப்பு


இராணுவத்தினர் நாட்டில் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் தொடர்நதும் கடுமையான முறையில் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

கிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களான கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் பை ஒன்றில் மறைத்து வைத்திருந்த கிளைமோர் குண்டுடன் குறித்த நபர்கள் தனது குழந்தையுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இந்த விடயம் தொடர்பில் இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை எனவும் மிகவும் பழமை வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறானாவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் பணம் அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

7 comments:

  1. இது தொடர்ரந்தால், ஒன்றில்லாது ஒன்று வெடித்தால், சிறுபான்மையினர் ஒன்று சேர வாய்ப்பேற்பட்டால், கற்பனை செய்து பார்த்தேன்.

    ReplyDelete
  2. முஸ்லிம் சிங்கள மோதலை உருவாக்கி இன்னொரு பக்கத்தால் குண்டு வைத்து தீவிரவாதம் செய்து நாட்டை சீரழித்து முஸ்லிம்கள் மேல் பழி போடுவதே இந்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் சார்ள்ஸ் நிர்மலநாதன், கருனாய், வியாழேந்திரன் போன்ற நாய்களை விசாரிக்க வேண்டும்

    ReplyDelete
  3. வடிகட்டிய முட்டாள் போன்ற ஒருசிலர் தவிர்ந்த ஏனைய முஸ்லிம்கள் வரலாற்று ரீதியாக இலங்கை திரு நாட்டிற்கு விசுவாசமாகவே இருந்து வந்தள்ளனர்.
    தற்போதைய சில அரசியல்வாதிகள் இதனை வசதியாக மறந்து விட்டு புலியைத் தூக்கி மடியில் வைத்துள்ளனர்.
    இதன் விலையை அப்பாவி மக்கள் சுமக்க கூடாது என்பதில் இராணுவம் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.
    தமிழ்ப பாசிசப் புலிகளுக்கு இலங்கை ஈடேறுவது ஒருக்காலும் பிடிக்காது.அதற்காக எத்தகைய காட்டிக் கொடுப்பையும் கூட்டிக் கொடுப்பையும் வெளிநாடுகளில் செய்வார்கள்.

    ReplyDelete
  4. கொந்தராத்துக்காரர்கள்.....

    ReplyDelete
  5. @Lafir & NGK, எதிரிகளை நம்பினாலும், துரோகிகளை நம்பக்கூடாது என்பதை சிங்களவர்கள் உணர்ந்துவிட்டார்கள். அதனால் தான் முஸ்லிம்களை 2014யிலிருந்து இல்லாத காரணங்களை கூறி, மாறி மாறி விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். எனவே எனிமேலாவது துரோகங்கள் செயவதை தவிருங்கள்

    ReplyDelete
  6. Suhaib உம்முடைய முட்டாள் தனமான கற்பனையால் முஸ்லிம்களை ஏன் கோர்த்து விடுகிறாய்? முஸ்லிம்கள் ஒரு பொழுதும் தமிழ் பயங்கரவாதத்தின் பின்னால் செல்ல மாட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.