Header Ads



சஹ்ரானின் தாக்குதலால் முஸ்லிம்ளே அதிகம் பாதிப்பு, உரிய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதன் மூலமே முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முஜிபுர் Mp



(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளில் ஒருவரான சாராவை இந்தியாவிலிருந்து அழைத்துவர அரசாங்கம் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அத்துடன் ஏப்ரல் தாக்குதலை காரணம் காட்டி ஆட்சிக்குவந்த அரசாங்கத்துக்கு இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போயுள்ளது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் (03) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்பது விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. அண்மையில் விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்க வந்த குற்றப் புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, சஹ்ரானுக்கு மேலாக ஒருவர் இருக்கின்றார். அது யார் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தபோதும் தனது பதவி காலம் முடிவடைந்ததால் முடியாமல்போனதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தநபர் யார் என்பது புலனாய்வு பிரிவு உட்பட அரசாங்கத்தில் அதிகமானவர்களுக்கு தெரியும். ஆனால் ஒரு வருடமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடித்து இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

அதேபோன்று கடந்த காலங்களில் எமது அரசாங்கத்தில் இருந்த பல அமைச்சர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தினார்கள். ஆனால் எதனையும் ஒப்புவிக்கவில்லை. அதேபோன்று இந்த தாக்குதலால் முஸ்லிம் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அதனால் விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளைன் கண்டுபிடிப்பதன் மூலமே முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றார்.

2 comments:

  1. இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் iss தீவிரவாதிகளினால் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள் முஸ்லிம்களும் இஸ்லாமிய நாடுகளுமே குறிப்பாக ஈராக்,ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,சிரியா மற்றும் ஆபிரிக்கா நாடுகளும் அவ்வாறு இருக்க இலங்கையில் அந்த தாக்குதலுக்கு பிறகு இன்னும் அப்பாவி முஸ்லிம்களே பழிவாங்கல் என்ற பெயரில் அனாவசிய கைதுகளும் விசாரணைகளும் நடக்கின்றன,இவற்றை முழுதாக எதிர்த்து பேச எங்கள் அரசியல்வாதிகள் யாருமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.