Header Ads



"பவித்திராவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை"


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.

இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை மருத்துவச் சபையின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய, மருத்துவச் சபையின் உறுப்பினர்களை நீக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

மருத்துவச் சபையின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் ஹரேவிந்திர சில்வா கூறியுள்ளார். எனினும் ஏனைய உறுப்பினர்கள் விலக போவதில்லை அறிவித்துள்ளனர்.

மருத்துவச் சபையின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், மருத்துவ கட்டளைச் சட்டத்திற்கு அமைய சுகாதார அமைச்சருக்கு இருந்தாலும் நீக்கும் அதிகாரம் இல்லை என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவர்கள் தீர்மானித்தனர். ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக மருத்துவச் சபையின் நிர்வாகத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. இலங்கை யில் எந்த அரசாங்கம் வந்தாலும் எவர் சுகாதார அமைச்சராக வந்தாலும் வைத்தியர் சங்கத்துக்கும் அமைச்சருக்கும் பிரச்சனை தான்.இதில் எங்கே கோளாறு இருக்கு என்று அரசாங்கம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.