Header Ads



நல்லடக்க மறுப்பு - நடந்ததும், நடக்க போவதும்..!!


Covid  19னால் இறக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின்  உடல்களை எரிக்கும் செயற்பாடுகள் ஒரு நிரந்தர  முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. ஆனாலும் வரப்போகும் தீர்வு குறித்த மக்களிடையே எந்தளவு ஏற்றுக்கொள்ளபடும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ஆனாலும் இந்த விடயத்தில் இதுவரை நடப்பது என்ன?அரசு இதுபற்றி என்ன செய்கிறது  என்பது பற்றிய பதிவே இதுவாகும்.

#உடல்_எரிப்பு_ஆரம்பம்

C-19 தொற்று. , தேர்தல் முடிவுகள். மற்றும் நோய் பற்றிய அதிக  அச்சநிலை சுகாதார. மற்றும் அரசியல் வாதிகளின் பதற்றம் என்பன ஆரம்பத்தில் உடல்களை எரிப்பதற்கு காரணமாக அமைந்தது இந்த விடயத்தில் முஸ்லிம்களின் தரப்பிலும். சாம்பலைப் பெற்று நல்லடக்கம் செய்யலாம் என்ற தீர்வுகளும் ஓரளவு ஏற்கப்பட்டது . ஆனாலும் கொவிட் இல்லாத சாதாரண உடல்களும்  சந்தேக அடிப்படையில் எரிக்கப்பட்டமை நிலைமையை மேலும் சிக்கலாக்கியது..

#முஸ்லிம்_தரப்பு_வாதம்

முஸ்லிம் களின் தரப்பில் குறித்த எரிப்பு விவகாரத்திற்கு 100% எதிர்ப்பு உள்ளது. மட்டுமல்ல இவ்விடயத்தில் அரசியல்.இயக்கம்சார் அனைத்து வேறுபாடு களுக்கும் அப்பால் எல்லோரும் ஒன்றிணைந்து தம்மாலான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.ஆனாலும் எதுவும் இடம்பெறவில்லை. குறிப்பாக நீதி அமைச்சர் அலிசப்ரி  அவர்கள் தனிமனிதனாக நின்று பல பாத்திரங்களை மேற்கொள்கின்றார்.அதேபோல எதிர்க்கட்சியினரும் செயற்படுகின்றனர்.

#எரிப்புக்கு_ஆதரவான_தரப்பினர் 

ஒரே நாடு.ஒரே சட்டம்.. கொடிய வைரஸ் அழிப்பு போன்ற பல விடயங்களிற்காகவும் கடந்தகால கசப்பான அனுபவங்களுக்கு பழிவாங்கும் நோக்கிலும் ஒருசிலர் இவ் எரித்தல்  நடைமுறையை நிரந்தரமாக கட்டாயப்படுத்த முயல்கின்றனர்.இதில்  பிக்குகள்.மற்றும் இனவாத அரசியல் கட்சிகள்என்பன  பலத்த செல்வாக்கை கொண்டுள்ளன.

#அரசின்_திண்டாட்டம்.

புதிய அரசு.  தொற்று நோய் பரவல். பொருளாதார இழப்புக்கள். மக்களின் எதிர்பார்ப்பு உணர்வுகளை  நிறைவேற்றல், இனவாத நண்பர்களை திருப்திபடுத்தல் போன்ற பல விடயங்களில் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது. ஆனாலும் முஸ்லிம்களின் இந்த எரிப்பு விவகாரத்திற்கு சாதகமான முடிவுகளை வழங்கி இப்பிரச்சினைனையைத் தீர்க்க அரச உயர்தரப்பு பல செயற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்தாலும் அது சிங்கள கடும் போக்குவாதிகளினது பலத்த எதிர்ப்பை எதிர்நோக்கியதால் அரசு பின்வாங்கி கொண்டது. மட்டுமல்ல அரசு ஒரு புதிய உபாயத்தை வகுத்து நகர்த்தி வருகின்றதை கூர்ந்து அவதானிப்பதன் மூலம் விளங்கி கொள்ள முடியும்.

#நிபுணர்கள்_குழு

C-19 தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர்கள்  குழு வில் எரிப்பை நிறுத்த ஒருசில பேச்சுவார்த்தை களில்  ஓரிரு அங்கத்தவர்கள் இணங்கினாலும். பேராசிரியர் மெத்திக்கா குலசேன போன்றோர் அதனை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி சாதாரண மக்களின் எதிர்ப்பை அரசுக்கு எதிராக திருப்ப முயன்றனர். மட்டுமல்ல இவ் அரசு "வியத்மக'போன்ற புத்திஜீவிகள் அமைப்புக்கள் நாட்டில் புத்திஜீவிகளின் சுதந்திர செயற்பாடுகள் பற்றி பேசிய விடயங்களும் இவ்வாறான வர்களைக் கட்டுப்படுத்த தடையாக அமைந்தது. 

அத்தோடு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தீர்ப்பும் எதிர்பார்க்கையாக இருந்தது. இந்த எல்லா அம்சங்களிலும் சாதகமற்ற முடிவுகள் வந்த நிலையில் அரசின் நட்புறவு கட்சித் தலைவர்களினதும் , விசுவாசம் மிக்க அமைச்சர்களின் உதவியுடன் அரசு  சிங்கள மக்களிடையே சிந்தனை மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

#புதிய_உபாயம்.

01).,மாலை தீவுடனான பேச்சும் , இணக்கமும்.

மாலைதீவு அரசுடனான பேச்சு உத்தியோகப் பற்றற்ற தாக இருப்பினும் அதில் பல விடயங்கள் உள்ளன. மாலைதீவு புதைக்க அனுமதிக்க வழங்குமாயின் ஏன் இலங்கையால் முடியாது? இரண்டும் நீர்வளமுள்ள கீழே என்ற வாதம் புதிய கருத்தாடலை சிங்கள மக்களிடையேயும் தோற்று வித்துள்ளது...ஆனால் இந்த கோரிக்கையை அரசு பாகிஸ்தானிடம்  கேட்டு பாகிஸ்தான் அனுமதித்திருந்தால் இந்த சிந்தனை மாற்றம் வந்திருக்காது. 

2).  பொதுநல சேனாவின் ஞானசார ஹிமி யின் பகிரங்க அறிக்கை.

இதில் அரசு நேரடியாக தலையிடாவிடினும் ஹிமியின் பேச்சு அரசுக்கு சாதகமாக்கப்பட்டுள்ளது. மட்டுமல்ல கடும்போக்கு வாத பிக்குகளின் இடையே தளர்வான போக்கை ஏற்படுத்தி உள்ளது. 

3) உடல்களை குளிரூட்டி யில் வைத்தல். 

நாட்டில் தொற்று உடல்களை எரிக்க வேண்டும் என்ற வர்த்தமானி நடைமுறையில் உள்ளது ஆனால் குளிரூட்டி யில் பாதுகாக்கும் அனுமதி பிரதமராகத் முன்மொழியப்பட்ட தருணம். இப்பிரச்சினயினை ஓரளவு திசைதிருப்பி உள்ளது.

4). புதிய 30 பேர் கொண்ட நிபுணர்கள் உள்ளடக்கம்.

அரசுக்கு சாதகமற்ற நிபுணர்களின் கடும்போக்கை குறைக்க பொதுவான நடுநிலைசார்  புதிய பலரை உள்ளடக்கி  புதிய குழு நியமிக்கப்பட்டது. இது இந்த விடயத்தில் இதுவரை நிலவிவந்த பல சிக்கல்களை தீர்க்கும் என நம்பலாம்.  மட்டுமல்ல நிபுணர்களின் அறிக்கை புதைப்பிற்கு அனுமதி வழங்குமாயின் அதுவும் ஒரு சுயாதீனமான முடிவாக கொள்ளப்படுமே தவிர அரசியல் தலையீடு இல்லை என தப்பிக்க அரசுக்கு உதவியாக அமையும்.

 #பிழையான_புரிதல்

உடல்களை எரித்தலை எல்லோரும் எதிர்த்தாலும் , அரசு இதில் அவசரமாக தீர்மானம் எடுக்க வேண்டும் என நினைப்பது பாதிக்கப்பட்ட தரப்பில் நியாயமான கோரிக்கை ஆயினும் சிங்கள கடும் போக்கால் களின் மனநிலையை ஓரளவாவது மாற்றாமல் அரசு அதனை மேற்கொள்ள முடியாது. இது அரசியல் இலாபங்களையும் அடிப்படையாக கொண்டது. 

#நியாயமான_விஞ்ஞான_வாதங்கள்.

இந்த ஜனாஸா எரிப்பை ஆதரித்து கடும்போக்கு சிங்கள தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படும் அதேவேளை அதே பக்கத்தில் இருந்துதான் புதைத்தலுக்கு சாதகமான விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை நிபுணர்கள் முன் வைக்கின்றனர். பேராசிரியர் மலிக் பீரிஸ்.  பேராசிரியர் நீதிக்கான மலாவிகே...போன்ற பலரும் தமது சமூகம். இனவாதம் என்ற எல்லைகளைத் தாண்டி உண்மையை உணர்ந்து கூறுகின்றனர். எனவேதான் எல்லா சிங்கள மக்களையும் இனவாதிகளாக  விமர்சிப்போர் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த வகையில் குறித்த விவகாரம் உணவு பூர்வமான , குடும்பத்தவர்களால் தாங்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனாலும் குத்திய  முள்ளின் வேதனையுடன் அதனை ஏசிக் கொண்டு காலம் நடத்துவதை விட  நிரந்தரமாக நீக்குவது எவ்வாறு என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். எனவேதான் அரசுக்கும். இனவாதிகளுக்கு ஏசிக் கொண்டிருப்பதற்கு அப்பால் முன்வைக்கப்படும் போகும் தீர்வை ஏற்பதா? மாற்று நடவடிக்கை என்ன?? அதனை எவ்வாறு நடைமுறையில் கொண்டு வருவது என்பது பற்றியும் ஆழமாகச் சிந்தித்து செயற்படுவோமாக...இவ்விடயம் வெற்றி அளிக்குமாயின் அது இந்த விடயத்திற்காக போராடிய அனைவரூக்குமான மன நிம்மதியாகவும் அவர்களது போராட்டதிற்கான பெறுபேறாகவும்  அமையும்...

முபிஸால் அபூபக்கர் - சிரேஷ்ட விரிவுரையாளர்

பேராதனைப் பல்கலைக்கழழகம் 30:12;2020

1 comment:

  1. Very good explanation. The government has created the problem. They would have followed the WHO guidelines. They can make only assumptions, but cant prove specifically.

    ReplyDelete

Powered by Blogger.