Header Ads



கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம்செய்ய மறிச்சுக்கட்டி, எரகம ஆகிய 2 பகுதிகள் பரிந்துரை


கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக நிலத்தடியிலிருந்து நீர்மட்டம் மிகவும் ஆழமாக இருக்கும் இரண்டு இடங்களை பரிந்துரை செய்து அறிக்கையை ஒப்படைத்துள்ளதாக நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இதன்படி வடக்கு மாகாணத்தில் மன்னார் மறிச்சுக்கட்டி எனும் பிரதேசமும் கிழக்கு மாகாணத்தில் எரகம எனும் பிரதேசமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப்பிரதேசங்களில் தரைமட்டத்திலிருந்து 30 ஆடி ஆழத்தில் கூட நீரை கண்டுபிடிக்க முடியாதென அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய நிலத்தடியிலிருந்து நீர் மட்டம் ஆழமாக உள்ள இடத்தைக் கண்டுபிடிக்குமாறு தன்னிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அதன்படி தனது அமைச்சின் புவியியலாளர் ஆய்வை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சரிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் நானாயக்கார தெரிவித்தார்.

3 comments:

  1. அரசாங்கம் உண்டுவிட்டு வடக்கில் அல்லது கிழக்கில் தான் மலம் கழிக்க பாக்கிறது.

    ReplyDelete
  2. Conjam kuditthu paarttu arikkayai kuduttirukkalamo..!!!!

    ReplyDelete
  3. அன்புள்ள Jaffna Muslims.
    எங்கப்பா இந்த எரகம?
    இது இறக்காமம்.
    அம்பாரை மாவட்டம்.
    North west of Akkaipattu and south east of Amparai.
    கொஞ்சம் விட்டுல் எங்கள் பெயரை மாற்றி விடுவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.