Header Ads



இலங்கையில் கட்டாய ஜனாஸா எரிப்பு - கவனத்தை குவித்தது பிரித்தானியா அரசாங்கம்


இலங்கையில் கொரோனவினால் மரணிப்போரின் கட்டாய தகனங்களால் முஸ்லிம் மற்றும் பிற நம்பிக்கை சமூகங்களுக்கு ஏற்படுத்தி உள்ள தாக்கம் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவுடன் நடத்திய கலந்துரையாடலின் போது அந்த நாட்டின் வர்த்தக தூதர் மேர்வின் டேவிஸ் பிரபு இது தொடர்பில் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், இங்கிலாந்து வர்த்தக தூதர் மேர்வின் டேவிஸின் நியமனத்தை இந்த சந்திப்பின் போது இலங்கை வரவேற்றது,

அத்துடன் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், பிரெக்சிட் காலத்திற்குப் பிந்தைய காலத்தில் பன்முக உறவை வளர்ப்பதற்கு இது உதவும் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.