Header Ads



முஸ்லீம் உடல்கள் தொடர்பாக ஆராயும் குழுவில், மேலும் உறுப்பினர்களை இணைக்க முடிவு - அசேல குணவர்த்தன


கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் மேலும் பலரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட குழுவில் மேலும் முஸ்லீம்களையும் தொற்றுநோய் நிபுணர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு மேலும் சமநிலை தன்மை மிக்கதாக காணப்படுவதாக மேலும் பலரை உள்வாங்கவேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் எனினும் புதிய குழுவில் இடம்பெறவுள்ளவர்களின் விபரங்களை வெளியிடவில்லை.

குறிப்பிட்ட குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்து ஏற்கனவே சமூக ஊடகங்களில் கேள்விகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. குழுக்கள் அமைத்ததாகவும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் அவ்வப்போது கடந்த 9மாதங்களாக செய்திகள் வந்தாலும் விசாரணை பற்றிய அறிக்கைகளோ அல்லது நிபுணர்கள் குழு விபரங்களோ வெளிவராதது மர்மமாகவே உள்ளது.

    ReplyDelete
  2. "முஸ்லிம்களின் உடல்" "முஸ்லிம்கள் ஜனாஸா" "முஸ்லிம்கள் அடக்கம்" இவ்வாறான வாசகங்களை விடவே மாட்டீர்களா? முஸ்லிம்கள் மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லையே? அப்படியிருக்க, இவ்வாறே தொடர்வது பிரச்சினையின் கனதியைக் குறைத்துவிடுமல்லவா?

    ReplyDelete

Powered by Blogger.