Header Ads



நான் மனமுடைந்துள்ளேன், வெறுப்புணர்வின் எல்லையை கடந்துவிட்டேன் - அலி ஷாஹிர் மௌலானா


முஸ்லீம் தம்பதியினரின் 20 நாள்; குழந்தையின் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த அப்பாவி 20 நாள் குழந்தை தனது உடல் தகனம் செய்யப்படுமளவிற்கு செய்த பாவம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் மனமுடைந்துள்ளேன் வெறுப்புணர்வின் எல்லையை கடந்துவிட்டேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாம் இன்னும் எவ்வளவு கொடுமையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் சகித்துக்கொள்ளவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது

நேற்று வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் தந்தையான பாஹிமுடன் நான் உரையாடினேன்.

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு திங்கட்கிழமை பத்துமணிக்கு குழந்தையை எடுத்துச்சென்றவேளை மருத்துவர்கள் குழந்தையை அன்டிஜென் துரிதசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது குழந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

எனினும் பாஹிமும் அவரது மனைவியும் பாதிக்கப்படவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

தனது குழந்தை கொரோhனவினால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கலக்கமடைந்த பாஹிம் அன்டிஜென் சோதனை முடிவுகள் பிழையாக காணப்படுவதும் குறி;த்தும் அறிந்திருந்தார். இதன் காரணமாக அவர் தனது குழந்தையை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் அதனை ஏற்க மறுத்த மருத்துவர்கள் தனியார் வைத்தியசாலையில் பிசிஆர் சோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

பாஹிம் முடக்கப்பட்ட பகுதியில் வாழும் முச்சக்கர வண்டி சாரதி, அவரிடம் அதற்கான வசதியில்லை,எனினும் அவர் சிலரை தொடர்புகொண்டு இதனை தெரிவித்தவேளை அவர்கள் பிசிஆர் சோதனைக்கு உதவ முன்வந்துள்ளனர்.

அன்டிஜென் சோதனை அறிக்கைக்காக அவர் காத்திருந்தவேளை – மற்றுமொரு மருத்துவமனையில் அவர் பிசிஆர் சோதனைக்காக காத்திருந்தவேளை அவரை மருத்துவமனையிலிருந்து செல்லுமாறும் அதிகாலை வருமாறும் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ளவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன்காரணமாக குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு பாஹிம் தனது மனைவியுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பிசிஆர் சோதனைக்கான பணவசதி இல்லாதநிலையில் தடுமாற்றமடைந்த பாஹிம் மருத்துவமனையை தொடர்புகொண்டவேளை அவர்கள் அவரது குழந்தையை தீவிரகிசிச்சை பிரிவிற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 5.30 மணிக்கு மருத்துமனையை அவர் தொடர்புகொண்டவேளை குழந்தை இறந்த செய்தியை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஹிம் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றவேளை மருத்துவர் அவர் சில ஆவணங்களில் கைச்சாத்திடவேண்டுமென கேட்டுள்ளார்.

பாஹிம் அதற்கு மறுத்தவேளை அந்த மருத்துவர் ஆவணத்தில் கையெழுத்திடுவதை தவிர வேறு வழியில்லை என்ற அர்த்தப்படமிரட்டியுள்ளார்.

மனமுடைந்த துயரத்தில் சிக்குண்ட தந்தை தனது 20 நாள் குழந்தையின் உடலை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு செல்ல தீர்மானித்துள்ளார்.

அன்று மதியம் அவருக்கு மருத்துவமனையிலிருந்து பல அழைப்புகள் வந்துள்ளன அவர் ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டுமென அவர்கள் கேட்டுள்ளனர்.

துயரம் அதிகரித்த நிலையில் பாஹிம் தனது சகோதரர் ரிவ்கானை அதிகாரிகளுடன் பேசுவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் தொடர்ந்தும் பிடிவாதமாக காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ரிவ்கான் தன்னால் கைச்சாத்திடமுடியாது என தெரிவித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

அவ்வேளை மருத்துவமனையில் பல ஊடகவியலாளர்கள் நடமாடியதை பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் மருத்துவமனையிலிருந்து பாஹிமை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவர்கள் அவரின் குழந்தையின் உடலை பொரரள மயானத்திற்கு தகனத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்துள்ளனர். தந்தை விரும்பினால் அங்கு வரலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாஹிம் தனது நண்பர்கள் சிலருடன் மயானத்திற்கு சென்றுள்ளார் ஆனால் தனது மகனின் உடல் தகனம் செய்யப்படுவதை பார்க்க விரும்பாததால் அவர் உள்ளே செல்லவில்லை.

அங்கும் அவர் ஊடகங்களின் அதீதமான செயற்பாடுகளை அவதானித்துள்ளார்.

No comments

Powered by Blogger.