Header Ads



பாரத லக்ஸ்மனை கொலைசெய்ய துமிந்த செயற்படவில்லை, மதுவை வழங்கி மோதலில் ஈடுபட வற்புறுத்தப்பட்டார் - ரஞ்சன்


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வா பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவை கொலை செய்யும் நோக்கத்துடன் செயற்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்க டெய்லி மிரரிற்கு தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை சம்பவத்திற்கு முன்பாக துமிந்தசில்வாவிற்கு மதுவழங்கப்பட்டது என ரஞ்சன்ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பாரதலக்ஸ்மன் பிரேமசந்திரவை கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்த ஒருவர் துமிந்தசில்வாவிற்கு மதுவை வழங்கி பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவுடன் மோதலில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வா என்னை ஒரு முறை தொடர்புகொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணையுமாறு கேட்டுக்கொண்டார் என குறிப்பிட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க நான் அரசதரப்பிற்கு சென்றால் எனக்கு எதிரான வழக்குகள் கைவிடப்படும் எனவும் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பாரதலக்ஸ்மன் பிரேமசந்திர கொலை குறித்த உண்மை தெரியவந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வா அனைத்தையும் என்னிடம் தெரிவித்தார், நான் இதனை பதிவு செய்து வைத்திருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துமிந்த சில்வா மதுபோதையிலிருந்தார், அவருக்கு அந்த கொலையை செய்யும் நோக்கமிருக்கவில்லை, அவருக்கு அதனால் அந்த எந்த பயனுமில்லை எனவும் ரஞ்சன்ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நீதிபதிக்கும் மேலாகச் சென்று அவருடைய கருத்தை மாற்றுவதறகு ரஞ்சனுக்கு சரியாகக் கவனிக்கப்ட்டிருப்பது போல தெரிகிறது. அல்குப்ர் குல்லுஹி மில்லதன் வாஹிதா.

    ReplyDelete

Powered by Blogger.