Header Ads



கண்டி நில அதிர்வு, குறித்து விரிவான ஆய்வு


கண்டியில் பதிவாகியுள்ள நில அதிர்வு தொடர்பில் விரிவான புவியியல் ஆய்வை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி – விக்டோரியா நீர்த்தேக்க பகுதியில் இடைக்கிடையே பதிவாகும் நிலஅதிர்வு தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கண்டியின் சில பகுதிகளில் நான்கு நில அதிர்வுகள் பதிவாகின.

இந்த நிலஅதிர்வுகளில்,ஓர் அதிர்வு பூமிக்கடியிலேயே உணரப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

இந்த சிறியளவிலான நில அதிர்வானது, மஹகனதராவ மற்றும் பல்லேகல நில அதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் பதிவாகிய போதிலும், ஏனைய நிலையங்களில் அது குறித்து பதிவாகியிருக்கவில்லை.

விக்டோரியா நீர்த்தேக்கதின் அணைக்கட்டு பகுதியில் பொருத்தப்ப்டடுள்ள கருவிகளில், பூமிக்கடியில் ஏற்பட்ட அதிர்வு பதவாகவில்லை.

அத்துடன் ஏனைய மூன்று நில அதிர்வுகளும், விக்டோரியா நீர்த்தேக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் பதிவாகியுள்ளன.

எனவே, இந்த அதிர்வுகள் ,பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் அதிர்வுகளால் உருவாவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களை புறந்தள்ளாது, அவ்வப்போது ஏற்படும் நில அதிர்வுகள் தொடர்பில் துறைசார் நிபுணர்களைப் பயன்படுத்தி விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சரின் ஆலோசனைக்கமை, பேராதனை பல்கலைக்கழகம், புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், மஹவெலி அதிகார சபையின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட் நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய, டொலமைட் அகழ்வு மற்றும் அதனை அண்மித்து ஏற்படும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது ஆய்வுகளை முனனெடுக்கும் நிபுணர்களின் அறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.