Header Ads



சுகாதார தரப்பினர் அறிவுறுத்தினால், ஜனாஸாக்களை அடக்கம் செய்வோம் -இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி ­


(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என சுகாதார தரப்பினர் தெரிவித்தால் அதனை செயற்படுத்த பின்வாங்கமாட்டோம் என ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி ,தேசிய மருத்துவ மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தினரது உடல் தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தினர் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனை பயன்படுத்தி எதிர்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார குழு அறிவுறுத்தினால் அதனை முழுமையாக செயற்படுத்த தயாராக உள்ளோம். எம்மதத்தினரது உரிமைகளையும் முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.

4 comments:

  1. ஆம்; உண்மையிலேயே கண்ணியமிக்க மெதகொட அபயதிஸ்ஸ தேரர் பொருத்தமான கருத்துக்களை கூறியிருப்பதனையிட்டு நாம் மகிழ்வடையாமல் இருக்க முடியாது. ஊடகங்களில் கொவிட் மரணங்களை அகற்றுவதற்கு உலகில் இரண்டே இரண்டு நாடுகளில்த்தான் தகனம் செய்தல் நடைபெறுகின்றது. உலகில் உள்ள 195 நாடுகளில் இலங்கையும் சீனாவும்தான் உடலகளை எதிர்க்கின்றன. உலக நாடுகள் பலவும் மாத்திரமன்றி WHO கூட எரிப்பினைத் தவிர்க்குமாறு கூறியும் அரசு விடாப்பிடியாக இருப்பதனை நோக்கக்கூடியதாக இருக்கின்றது. இது ஏன் என்று புரியவில்லை. சுகாதார நிபுணர்கள் குழுவில் யார் யார் இருக்கினறார்கள் என்பதனையாவது அரசு தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் அந்நிபுணர்கள் உண்மையிலேயே அதற்கான தகமையுடையவரகளா என்று மக்களும் புத்திஜீவிகளும் புரிந்து கொள்வர். முஸ்லிம்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இருந்தால் அரசு WHO வின் உதவியை நாடலாம். அவரகளும் மனமுவர்ந்து இதனைத் தீர்த்து வைப்பார்கள். அதனை விடுத்து நாங்கள் எரிப்போம்தான் என்ற முடிவில் அரசு தொடர்ந்து இருந்தால் முடிவு பிழை என்றால் அதனை கடவுள் பார்த்துக் கொள்வான். இதைத் தவிர முஸ்லிம்களால் ஒன்றும் செய்ய கூற முடியாது.

    ReplyDelete
  2. நாட்டைக் குட்டிச்சுவராக்கும் இனவாத எருமைகளை அகற்றி, அதற்கு அதுசார்ந்தவர்களை நியமித்தால் நேர்மையான முடிவுகளை எதிர்பார்க்கலாம்?

    ReplyDelete
  3. இதைதான் சுகாதார துறை சொல்கின்றது. அரசாங்கம் சொன்னால் போதும் என்று. சுகாதார அமைச்சர் சொல்கின்றார், வைத்தியர்கள் சொன்னால் சரி என்று.

    இடையில் இரண்டையும் மிரட்டும் கூட்டம் அலருகின்றது.

    புத்தி சாலிதனமாக பேசுகின்றனர் என்று கேவலமான நினைப்பு வேற இவர்களுக்கு

    ReplyDelete
  4. வைத்திய சங்கத்திற்கு இவ்வளவு பயமா? இந்த நாட்டை நிர்வாகம் செய்வது வைத்தியர்களா? அல்லது கோதபாயவா?

    ReplyDelete

Powered by Blogger.