Header Ads



ஆறுதலை கொடுத்துள்ள ராவய, காணாமல் போன முஸ்லிம் அரசியல்வாதிகள் - மண்ணுக்குள் புதையுண்டுபோன மனித நேயங்கள்


(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா)

21 ஆம் நூற்றாண்டானது வரலாற்றில் பல பதிவுகளுக்கு வித்திட்ட ஆண்டாக பிரகடனப்படுத்தினால் அது மிகையாகாது. உண்மையினையும், அசத்தியத்தினையும் பிரித்தறிவதில் ஏமாளிகளாக மாற்றப்படும் சமூகங்களின் வாழ் நாள் என்பதாக நாம் இதனை நோக்கலாம்.

சமூகங்களின் தோற்றங்களை ஆய்வாளர்கள் பல் வகைப்படுத்தி தமது பதிவுகளுக்கு உயிர் கொடுக்க முயற்சித்த போதும் இறுதி வடிவமும்,மூச்சும் மனித நேயமாகத் தான் இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக கூறி நிறைவு செய்வதை நாம் காணாமலுமில்லை.இலங்கை போன்ற பல்லின சமூகத்தின் மத்தியில் மனித நேயங்களுடன் வாழும் மனிதர்களும் இருக்காமலில்லை.தற்போது பேசப்படும் சிங்கள பெரும்பான்மை சமூகத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் விக்டர் அய்வன் ஒரு சிம்ம சொற்பணம் என்று தான் கூறவேண்டும்.இது போன்று இன்னும் எத்தனையோ சிந்தணையாளர்கள் சமூகத்தில் புடம் போடமலுமில்லை.

தனித்துமிக்க ஒரு பாதையில் தம்மை ஈடுபடுத்திவரும் மூத்த எழுத்தாளர் விக்டர் அய்வனின் ராவய சிங்கள பத்திரிகை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது என்பதை மறைத்து பேசவும் முடியாது. அதிகார வர்க்கம் ஆட்சியில் தம்மை தக்க வைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளுக்கு சோர்ந்து போகும் வலுவிழந்த தலைமைகள் விக்டர் அய்வனின் அபரிமித கருத்துக்களையும்,துணிச்சலையும் குறைந்தது பார்க்கமால் இருப்பார்கள் எனில் இன்னும் வெளிச்சத்தில் நின்று கொண்டு இருட்டை அண்மிக்க ஆசைபடும்; மனித நேயத்தை துழைத்தவர்களாகவே பயணிக்க நேரிடும்.

முஸ்லிம்களின் அருள் மறையும்,முஹம்மத் நபி (ஸல்)அவர்களுடைய வாழ்க்கை முறையும் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் கற்றுத் தந்த பாடங்கள் இன்னும் இன்றும் எமது ஏனைய மாற்று மதத்தின் சகோதரர்களினால் உவமானமாக ஒப்பிட்டு பேசப்படும் செய்திகளும் காதுகளை ரீங்காரம் செய்யமலில்லை.இஸ்லாம் ஒன்றே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வாகும் என்று உலகலாவிய முஸ்லிம் உம்மத்துக்கள் ஓங்கி பறைசாற்றும் இந்த நிலையில் முஸ்லிம் நாடுகள்  வழுவிழந்து போயுள்ள மக்களின்  மன நிலைக்கு என்ன மருந்தினை கொடுத்துள்ளார்கள் என்பது சமூக மட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு கேள்வியாகும்.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் சிதைந்து போன பெரும்பான்மை சமூகத்துடனான உறவுகள் மீள் கட்டியெழுப்ப எம்மால் முன்னெடுக்கப்பட்ட நகர்த்தல்கள் எந்த அளவுக்கு இன்றைய புதிய ஆட்சியாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்பதும் வெறும் அறிக்கைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொன்றாகவே பரிணமித்துள்ளது.இந்த தினத்தில் இருந்து இன்று வரை இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் நாளுக்கு நாள் சவால்களை சந்திக்கும் சங்கடத்தை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் மனித நேயங்கள் பதவிகளுக்காக பறிகொடுக்கப்பட்டு விட்டதா? என்ற் சிந்தணைகள் எம்மில் எழாமலில்லை.ஆட்சியாளர்கள் எம்மில் நாடி நிற்கும் நிலை மாற்றப்பட்டு நாம் அவர்களில் தங்கி நிற்கும் பேதலித்த சிறு பிள்ளைத்தனமான அரசியல் அவலங்களை தினந்;தோரும் எம் கண்கள் காணமலும் இல்லை.

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா ? என்ற பழமொழிpயொன்றின் கருத்தாழத்தை இன்று நாம் பேசும் சமூகத்தின் காவலர்கள் வாடகைக்கு கொடுத்துவிட்டு அதனது மூலதானத்தையும்  அடைந்து கொள்வதில் செயற்படுவது தான் துன்பியல் செயலாகும்.உரிமை அரசியலை மேடைப் பேச்சுக்களில் முழங்கியவர்கள்,அதனை மறந்து சலுகை அரசியல் போர்வைக்குள் முகம் குப்புற விழுந்து இருட்டில் தான் இட்டதை பெற்றுக் கொள்ள தேடும் அவலத்தை காண்பதற்கு அவர்கள் கொடுத்து வைக்கவில்லை.விழியிருந்தும் பார்வையற்றவர்களாக சமூகத்தின் நாட்டங்களை தூரப்படுத்தும் செயற்படுகளே அவர்களது விமோசனங்களாகும்.

நாளுக்குள் நாள் புதைக்கப்படும் மனித நேயங்களை கண் முன்கொண்டுவந்து அதற்கு தீர்வை தேடும்; மனிதர்களை கண்டு கொள்ள முடியாத காலத்தில் எமது பிரச்சினைகளை தேசமறியச் செய்து அதற்கு பரிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் சகோதர இன சமூகத்தின் மனித உணர்வாளர்களை நாம் மெச்சியே ஆக வேண்டும்;.கடலை கடப்பதற்கு கப்பல் தேவை ஆனால் இன்று அலையை கூட தொட்டுப்பார்ப்பதற்கு முடியாத தத்தளித்து திசைமாறும் தகுதியற்ற தெரிவுகள் இனியும் திருந்தப் போவதில்லை.விட்டதைப் பிடிக்கும் வேகமும்,அதனை அடைந்ததினால் அனுபவிக்கும் ஆனந்தமுமே 5 வருட காலத்தில் அவர்களது தற்காலிக அகமகிழ்வாகும்.

இரண்டையும் தராசில் இட்டு நெறுத்துப் பார்ப்போமெனில் கனப்பது மனித நேயம் என்பதை சொல்லியும் விளங்காத மனிதப் பிரவிகளிடம் எமது சமூகம் எதனை வேண்டி நிற்கப் போகின்றது.இறுதியில் பொறுத்துப் பார்த்தால் முடிவு வெறும் பூச்சியம் தான்.

இதனை களைந்து சமூக உணர்வலைகளை சீறிய மார்க்க பட்டறையில் வார்த்த இரும்புகளை ஆட்சிக் கதிரைக்கு கொண்டுவந்தால் மட்டுமே நாம் எதிர்பார்த்த  இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபூபக்கர் சித்தீக் (ரழியல்லாஹீ அன்ஹூ) போன்ற சமூகத்தின் தலைவர்களை புடம் போடலாம்.இனியும் நாம் எமது பாதையினை தெரிவு செய்யாவிட்டால் மிஞ்சியிருக்கும் மனித நேயமும் புதையுண்டு போய்விடுமோ ?.........


3 comments:

  1. We have been living hundred years in this country but we failed to create a Sinhalese news paper ..so ; now we are forced to thank give to this newspaper.
    Utter failure of Muslim groups .they fight each other and they spend money on each other but they do not prioritise what is important to your community .
    A good sinhalese daily news paper run by our community
    A good sinhalese TV run by our community
    A good sinhalese radio run by our community..
    How many Madarasa we have ?
    How many additional mosques we have ?
    These Saudi agents who spend million on Wels; mosques and other matters do not understand how to apply Islam into our community in Sri Lanka

    ReplyDelete
  2. கற்பனைக்கதைகள் கேட்பதற்கு அழகாகவும் வாழ்ந்து பார்க்க ஆசையையும் தூண்டும். ஒரு சங்கத்தைப் பொறுப்பெடுத்தால் தான் சங்கடங்கள் புரியும்.

    ReplyDelete
  3. SHAME ON MUSLIM UMMA STILL BELIVING SOME MUNAFICK POLITICIAN AND ULAMA, WAKE UP READ YOUR HISTORY, LOOK AROUND YOU, CHECK OTHER COMUNITY ATLEAST, PREPARE GOOD LEADER IN ALL TALLENT,

    ReplyDelete

Powered by Blogger.