Header Ads



‌ புரெவிச் சூறாவளி அரபுக்கடலை சென்றடையும் என எதிர்பார்ப்பு


புரெவி சூறாவளி இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக  இதேவேளை,முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக  அரபுக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்பதாக வளிமண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப் பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சூறாவளி காரணமாக காற்றின் வேகம் மணித்தியாலத் துக்கு 80 – 90 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தி யாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை உயர்வதற்கு சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தச் சூறாவளி காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காற்றுடனான கடும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் தொடர்ந்தும் கனமழை பெய்யக்கூடும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.