Header Ads



மோட்டார் வாகனத்தில் பயணித்தவருக்கு திடீரென மாரடைப்பு - கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்


மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நபரிடம் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் படல்கும்புர - எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொறியிலாளர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவரது மனைவி மெதகம பிரதேசத்தில் வைத்தியராக பணியாற்றுகின்றார். அவர் புத்தல பிரதேசத்தில் இருந்து தனது வீட்டிற்கு வருகைத்தந்த போது இந்த திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத்தை அருகில் நிறுத்தி விட்டு பொறியிலாளர் உதவி கோரியுள்ள நிலையில், லொறி ஒன்றில் சென்ற மூவர் அவரிடம் பேச முயற்சித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் அவரால் பேச முடியாமல் போன சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்ட நபரின் பையில் இருந்து 81 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வேறு சிலர் பொறியிலாளரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு கண்டி வைத்தியசாலை இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் கடுமையான நோய் பாதிப்பில் இருந்த போதிலும் பொறியிலாளர் சந்தேக நபர்களின் டிப்பர் வாகனத்தை புகைப்படம் எடுத்துள்ளார். அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21, 23 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

1 comment:

  1. we should take from this incident many lessons. we are producing like these human beings in SriLanka. We are in top in racial and unethical matters. But we are not ready to make good moral humanity animals. We everyone should shy like this incident. No word to say here............

    ReplyDelete

Powered by Blogger.