கிழக்கின் மூத்த எழுத்தாளரும், இன்றைய முஸ்லிம் இலக்கிய உலகின் தோற்றத்திற்கும் அதன் புதிய ஆளுமைகளின் உருவாக்கத்திற்கும் அடிப்படையாக இருந்த மருதூர் ஏ மஜீத் (1940-2020) மௌத்தாகி இருக்கின்றார்.
மூத்த இலக்கிய ஆளுமைகளுக்கே உரிய பேச்சும், செயற்பாடும், புகழும் அவரிடம் நிறையவே இருந்தன.
பிறந்த ஊரின் பெயரை தன் இயற் பெயரோடு இணைத்துபடி இலக்கியம், சிறுகதைகள், மருத்துவம், வரலாறு என பல துறைப்பட்ட 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய உள்ளடக்கங்களை வெளி உலகிற்கு கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு உழைத்தவர். உயிரோடு இருக்கும் காலங்களில் தன் வாழ்நாளை பிரயோசனமாக பயன்படுத்திக் காட்டிய, இந்த மூத்த மனிதனின் இழப்பு என்றுமே ஈடுசெய்ய முடியாதாகிவிட்டது.
மறுமையிலும் அவரது வாழ்வு மகத்தானதாக அமையட்டும்.
முபிஸால் அபூபக்கர்
26:12:2029
0 கருத்துரைகள்:
Post a comment