Header Ads



விவசாய நிலங்களுக்கு சென்று, விவசாயிகளின் மன வேதனைகளை நேரில் கேட்டறிந்த ஜனாதிபதி


இன்று (26) பிற்பகல் அனுராதபுரம் எலேபத்துவ, பஹலகமவுக்கு  சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சேனா படைப்புழு தாக்கத்தினால் சோளப் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக படைப்புழு அச்சுறுத்தலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் படைப்புழு தாக்கத்தினால் பல மாவட்டங்களில் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் விளைச்சல் அதிகளவு குறைந்துள்ளது என்று விவசாயிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

காட்டு யானைகளினால் தோட்டங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் விவசாயிகள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்தனர்.

விவசாய நிலங்களுக்கு வந்து தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்ததற்காக விவசாயிகள் ஜனாதிபதி அவர்களை பாராட்டினர்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுடன் மிரிசவெட்டிய விஹாராதிபதி ஈதலவெட்டுனுவெவே ஞானதிலக தேரரும் வருகைதந்திருந்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2020.12.26



3 comments:

  1. பௌத்த ஜனாதிபதி பௌத்தர்களின் விடயங்களை மாத்திரம் கண்காணிப்பு செய்வார்.

    ReplyDelete
  2. Inga Tamils farmers too faced the same...!!!

    ReplyDelete
  3. big lier ,raceist, looting lot money from ceylon , thugs

    ReplyDelete

Powered by Blogger.