Header Ads



சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் திரிபு, முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது


- ச.சந்திரபிரகாஷ் -

கொரோனா வைரஸின் திரிபு சுவிட்சர்லாந்திலும் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளதாக கிறிஸ்மஸ் தினமான வெள்ளிக்கிழமை பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கோவிட்-19 சோதனை செய்தவர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டு மாதிரிகள் கேள்விக்குரிய திரிபுகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாநிலங்களிலும் இருந்து கிடைக்கப் பெற்ற மாதிரிகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் (உல்லாசப் பயணிகள்) என்றும் , இவர்கள் சுவிட்சர்லாந்தில் கோவிட்-19 தொடர்பான பரிசோதனைகளை செய்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள வளர்ந்து வரும் வைரஸ் நோய்களுக்கான தேசிய குறிப்பு மையத்தில் இந்த மாதிரிகள் வரிசைப்படுத்தப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதிரிகள் கிடைக்கப் பெற்ற மாநிலங்களில் தொற்று மாறுபாடு பரவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த மாநிலயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்பது தொடர்பாக அதிகாரிகளினால் வெளியிடப்படவில்லை.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரில் ஒருவர் தற்போது இனம் காணப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது நபரை தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் பணியில் இந்த செய்தி வெளியிடம் வரை உள்ளனர்.

ஆயிரக்காணக்கான இங்கிலாந்தவர்கள் விடுமுறைகளை கழிப்பதற்காக இங்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.