Header Ads



உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லீம்களிற்கு எதிரான, உணர்வுகள் உருவாக்கப்படுவதற்கான சிறந்த உதாரணம்


இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற செய்தி கரிசனை அளிக்கின்றது என பிரிட்டனின் முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த கொள்கை இலங்கையின் முஸ்லீம்களின் உரிமைகள் மற்றும் மத சுதந்திரத்திற்கு முரணானது என்பதுடன் இந்த விவகாரம் தொடர்பில் காணப்படும் விஞ்ஞானரீதியான முடிவுகளிற்கும் முரணானது எனவும் பிரித்தானியாவின் முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.

உடல்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலும் புதைப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் வலுவான நடைமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளனர் என பிரிட்டன் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் சுகாதார ஆபத்துக்கள் எதுவுமில்லை என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோய் காரணமாக உயிரிழந்தவர்களை தகனம் செய்யவேண்டும் என்பது பொதுவான கட்டுக்கதை என தெரிவித்துள்ள பிரிட்டன் அமைப்பு ஆனால் இது உண்மையில்லை தகனம் என்பது கலாச்சார தெரிவுகள் கிடைக்கின்ற வளங்கள் எனவும் தெரிவித்துள்ளது.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கைக்கு காரணங்களுடன் கூடிய நியாயப்படுத்தல் எதுவுமில்லாததன் காரணமாக உடல்களை தகனம் செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் வற்புறுத்துவதுஅரசாங்கத்தின் அனுசரணையுடன் இஸ்லாமிய மதம் குறித்து அச்சம்உருவாக்கப்படுவதற்கான சிறந்த உதாரணம் எனவும் பிரித்தானிய அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டை கைவிடுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என என பிரிட்டனின் முஸ்லீம் பேரவை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.