Header Ads



முஸ்லிம்களின் உடல்களை அடக்கம்செய்யும், உரிமையை வழங்குங்கள் - தமிழ் தேசிய கூட்டமைப்பு


முஸ்லீம்மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்ஏ சுமந்திரன் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இன்று -19- நடைபெற்ற அதன் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.

கொவிட் 19 காரணமாக உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பில் தாமதமின்றி இறுதி முடிவை எடுப்பது அவசியமானதாகும்.

மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி உடல்களை புதைப்பது ஏனையவர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது போல தோன்றுகின்றது.
உலகின் பல நாடுகளில் ஏனையவர்களிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற அடிப்படையில் உடல்கள் புதைக்கப்படுகின்றன என தோன்றுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விடயம் குறித்து முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நியாயமான நேரிய முடிவொன்றிற்கு வரவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது என நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முஸ்லீம் மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு அவர்களிற்குள்ள உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்,இது தொடரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. முஸ்லிம்கள் மட்டுமல்ல, அடக்கம் செய்வதை வழக்கமாக அதனை விரும்பக்கூடிய அனைவருக்கும் முறையான சுகாதார வழிமுறைகளுடன் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்...

    ReplyDelete
  2. நிபுணர்கள், அமைச்சர்கள், ஜனாதிபதி எல்லாருக்கும் தெரியும் இது ஒரு கற்பனையான காரணம் என்று. ஆனால பெரும்பாண்மையான சிங்களவர்கள் மக்கள் முஸ்லிம்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதினால், அரசுக்கு வேறு வழியி்ல்லை.

    இந்த பிரச்சணை முடிந்துவிட்டால், என்னுமொறு கற்பனை பிரச்சணையுடன் முஸ்லிம்கள் மீண்டும் இழுக்கப்படுவார்கள்.

    ReplyDelete
  3. Where is NOOR NIZAM and Ulama Katchi Mubarak moulavi (red cap). Why don't you both go and speak to your master. உங்கள் இரண்டு பேருக்கும் ரோஷம் ஏதும் இருந்தால் இதற்கு இந்த யாழ் முஸ்லிம் இல் மறுமொழி தர வேண்டும் என்று தயவாக கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு ஏமாந்த மனிதர்கள்.

    ReplyDelete
  4. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றி.தமிழ்பேசும் மக்களின் ஐக்கியத்தை அரசியல் இலக்காக்கிய செல்வநாயகத்தின் காலம் திரும்பவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.