Header Ads



சபாநாயகரின் விருந்துபசாரத்தை நிறுத்தி வைக்குமாறு, எதிர்க்கட்சி கோரிக்கை


சபாநாயகரினால் வழங்கப்படவுள்ள விருந்துபசாரத்தை நிறுத்தி வைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

பாராளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு அந்த விருந்துபசாரத்தை நடத்தாமலிருப்பதே உசிதமானது எனவும் அவர் கூறினார். 

´தற்போதைய கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் 225 உறுப்பினர்களையும் மேலும் பலரையும் விருந்துக்கு அழைத்துள்ளீர்கள். இப்போது மக்கள் உண்ண உணவில்லாமல் கஸ்டப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் விருந்துபசாரத்திற்கு செலவிடும் பணத்தை அவ்வாறான மக்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். முன்னாள் சபாநாயகர் பாஸ்கு தாக்குதல் சூழலில் இதனை நடத்தவில்லை. ஆகவே தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு சம்பிரதாயபூர்வமான இந்த விருந்துபசாரத்தை இடைநிறுத்துமாறு கேட்கின்றேன்.´ 

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறித்த விடயத்தை நடத்துவது குறித்து சிந்திப்பதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.