Header Ads



கேகாலை மருத்துவரின் மருந்தினை பயன்படுத்தியவர்கள், தங்களை கொரோனா தாக்காது என கருதக்கூடாது


கேகாலை மருத்துவரிடமிருந்து மருந்தினை பெற்ற அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொரோனா வைரசினால் தங்களிற்கு பாதிப்பு ஏற்படாது என கருதக்கூடாது என கேகாலை வரக்காபொலவை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்து ஆலயமொன்றிற்கு பொறுப்பாக உள்ள ஒருவர் கொரோனா மருந்து என தயாரித்துள்ளதை உடுக்கும்புர ஒத்தினப்பிட்டிய பகுதியில் விற்பனை செய்துள்ளார் அதனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொள்வனவு செய்துள்ளனர்

என வரக்காபொலவின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதியிலிருந்து பல கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,இதனை தொடர்ந்து பொதுமக்களை சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்தினை பயன்படுத்தியதால் தங்களிற்கு ஆபத்து ஏற்படாது என கருதி மக்கள் அலட்சியமாக செயற்படக்கூடிய ஆபத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுர்வேத மருந்தினை பயன்படுத்தினார்களா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

முன்னர் ஆயுர்வேதமருந்து இலவசமாக வழங்கப்பட்டது ஆனால் தற்போது அப்படியில்லை என சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.