Header Ads



மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பும், இலங்கையர்களை சுரண்டும் மாபியாக்கள்


கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வெளிநாடுகளில் எவ்வித உதவிகளும் இன்றி சிக்கி தவிக்கும் இலங்கையர்களை சுரண்டும் மாஃபியா செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் மிக நெருக்கமான நண்பர்களான வர்த்தகர்கள் சிலருக்கு அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை வழங்கி விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களை அந்நாட்டுக்கு அழைத்து இந்திய அரசாங்கம் தலையிட்டு 800 ரியால் பணத்தை விமான பயணச்சீட்டுக்காக வழங்குகிறது.

எனினும் மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இலங்கையர்களிடம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரியால் அறவிடப்படுகிறது. இந்த தொகையானது வழமையான காலத்தில் அறவிடப்படும் தொகையை விட மிகவும் அதிகமான தொகை.

இவ்வாறு அதிகமான தொகையை செலவிட்டு இலங்கை திரும்பும் நபர்களுக்கு தனிமைப்படுத்துவதற்காக 5 நட்சத்திர ஹொட்டல்களை வழங்கி, அதன் ஊடாக மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை சுரண்டுகின்றனர்.

வெளிநாடுகளில் தொழில்களை இழந்து, இலங்கை திரும்ப தாமதமாகிய நிலையில் நாடு திரும்பும் இலங்கையர்கள் மரத்தில் இருந்து கீழே விழுந்த நிலைமையில் இருக்கும் போது அரசாங்கத்திற்கு நெருக்கமான வர்த்தகர்களின் மாஃபியா என்ற மாடு முட்டும் கதையாக மாறியுள்ளது எனவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.