December 03, 2020

பொறுப்புக்களை கேட்டுப்பெற்றுக்கொண்டவர்கள் அதில், அதீத கவனம் செலுத்த வேண்டும்


- அபூ அப்துர்ரஹ்மான் -

இலங்கை வாழ் முஸ்லீம்கள் இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை பொறுப்புடைய ஒவ்வொருவரும் மிகவும் தூர நோக்கோடு அணுகி அதட்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அந்த வரிசையில் ......

எங்களது ஊர்களில் உள்ள அரசியல் பிரமுஹர்ஹலான நகர சபை உறுப்பினர்கள் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, அவர்கள் இரவு பகலாக யார் யாருக்காக உழைத்தார்களோ, அவர்களிடம் முஸ்லிம்களின் ஜனாசா எரிப்பு விடயமாக - எங்களது எதிர்ப்புகள் மணக்குமுறல்கள் அவர்கள் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கு - எந்த அளவு அழுத்தங்களை பிரயோகித்துள்ளார்கள் என்பதனை அவர்கள் ஊர்மக்களுக்கு கட்டாயம் முன்வைக்க வேண்டும். எங்களுக்கு பலவிதமான வாக்குறுதிகளை வாரியிறைத்துவிட்டு எங்களது அடிப்படை உரிமைகளுக்கே அவர்களிடம் கெஞ்சி நிட்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளனர். 

எங்களது மண்ணின் மைந்தர்களான அரசியல் பிரமுகர்களே, உடன்பிறவா சகோதரர்களே!

எப்போதும் எம்மைப் படைத்த அல்லாஹ் உங்களுக்கு துனை நிற்கப்போதுமானவன் ! உங்கள் பொறுப்புக்களை தட்டிக்கழிக்க வேண்டாம்! அல்லாஹ்வை தவிர வேறவருக்கும் அஞ்ச மாட்டோம் என்பது நமது ஈமான். 

நாடாளுமன்றத்தில் உங்களை பிரதிநிதிப்படுத்தும் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தோடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகியுங்கள். அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கு அடுத்து உங்களினது இரவு பகல் பாரத உழைப்பின் காரணமாகவே அவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கின்றார்கள். பொறுப்புள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது ஊர்களில் உள்ள (எமது வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள) அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களினூடாக அரசின் இந்த மனிதநேயமற்ற செயல்களுக்கு எதிராக எமது எதிர்ப்புக்களையும், கண்டனக் குரல்களையும் பாராளுமன்றத்தில் ஒலிக்கச்சையவேண்டும். 

அதே நேரம் நாங்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடத்தில் மண்டியிட்டவர்களாக எமது பாவம் குறைகளை முன்வைத்து அனுதினமும் அவனிடத்தில் பாவமன்னிப்புக்கோரி எம்மை நாம் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டும். நடைபெறுகின்ற அனைத்தும் இறைவன் நாட்டப்படியே என்பதனை உளப்பூர்வாமாக ஏற்றுக்கொள்வதோடு அல்லாஹ்வின் ஆதரவையும் அவனது ரஹ்மத்தையும் வேண்டியவர்களாக நல்லமற்களைக்கொண்டும் பொறுமையை கொண்டும் அவனது உதவிக்காக காத்திருக்க வேண்டும்.

 “நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.” (2:153)

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!” (2:155)

இவ்வாறு நாம் அவனை சரியான முறையில் நெருங்குகின்றபோது முன்னர் எங்களை எவ்வாறு நிம்மதியாக வாழவைத்தானோ அதைவிடப் பன்மடங்கு நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்வதற்கு உகந்த ஒரு சூழலை நமக்கு அமைத்துத் தருவான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 

والله المستعان


3 கருத்துரைகள்:

2 PERIYA POIYARKAL! EMAATRUKKARARKAL!
APPAVI MUSLIMGALIN VÀAKKUKALAI
VITRU VIYAPARAM SHEIUM HAKEEM
RISHADUYA PADANGAL ENGEY??

எங்கள் பிரதிநிதிகள் எல்லோரும் தமக்கு முடிந்த முயற்சியை இந்த விடயத்தில் செய்து கொண்டுதான் இருக்கின்றனர் போல்தான் இருக்கிறது. சிங்கள மென்போக்காளர்களுக்கும் தீவிரபோக்காளர்களுக்குமிடையிலான போட்டிதான் இப்போது காணப்படுகிறது. தீவிரப்போக்குள்ளவர்கள் பக்கம் அதிக சிங்கள மக்கள் ஆதரவு இருப்பதாகத் தோன்றுகிறது. அதனால் மென்போக்காளர்கள் தமது கருத்தினைத் தடிப்பமாக முன்வைக்க தயங்குகின்றனர். ஏன், மென்போக்காளரான பஷில் அவர்களைக் கூட பாராளுமன்திற்கு உள்வாங்க அரசாங்கம் தயங்குகின்றது போல் தோன்றுகின்றது. மென்போக்காளரான அவரை தீவிரபோக்குள்ள அரசியல்வாதிகளும் அவர்களைச்சுற்றியுள்ள அதிக மக்களுக்கும் விரும்பமாட்டார்கள். இனவாதம் என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உதவலாம் ஆனால் நிம்மதியாக ஆட்சி செய்ய உதவாது என்பது பழுத்த அரசியல்வாதியான மஹிந்த ஐயாவுக்குத்தெரியாதது அல்ல. அதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இனவாதம் பேசி அரசியல் செய்யும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தார். கிராமப்புற சிங்கள மக்கள் உலகத்தின் போக்கினை அறியும் ஆற்றல் ஏற்படும் வரை இந்த நிலையே இலங்கையில் காணப்படும். இலங்கையின் கிராமங்கள் வளர்ச்சி பெறுவதை இனவாதம் பேசும் கட்சிகள் விரும்பாது என்பதனையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன். வளர்ந்த அமெரிக்க மக்களையே ட்ரம்ப் சுதேசிகள் என்ற ஒரே வார்த்தை மூலம் ஒருமுறை ஏமாற்றி விட்டார் என்றால் கிராமத்து சிங்கள மக்கள் எம்மாத்திரம். அவ்வார்த்தையைப் பாவித்து ட்ரம்ப் வெற்றி பெற்றதனை இலங்கையின் இன்றைய ஜனாதிபதி அவருடைய தேர்தல் காலத்தில் சிலாகித்துப் பேசி சிங்கள வாக்குகளைப்பெற்றுக் கொண்டார் என்பது அவதானித்தவர்களுக்குப்புரிந்திருக்கும். நேரம் கிடைக்கும் போது மேலும் சிலவற்றைப் பேசுவோம்.

எது எப்படியிருப்பினும், ஜனாஸாக்கள் விவகாரம் சமூகக் கடமை என்றவகையில் அவற்றின் இறுதிக்கிரியைகள் "சுகாதாரம்" என பொதுமைப்படுத்தப்பட்டுப் பலவந்தமாக நிறைவேற்றப்படும்போது நிலைமையைக் கவனத்திற்கொண்டு அவ்வக்குடும்பங்களைத் தவிர்த்து சமூக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பொறுப்பேற்று முன்னெடுப்பது முரண்பாடுகளைத் தவிர்க்க ஓரளவு பங்களிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு???

Post a comment