Header Ads



முதலில் எனது கழுத்தை அறுக்கலாம், மாட்டிறைச்சியை முழுமையாகத் தடைசெய்யுங்கள் - மேர்வின்


(நா.தனுஜா)

உலகநாடுகளுக்கு விலங்குகளின் இறைச்சியை விநியோகிக்கக்கூடியவாறான தொழிற்சாலையொன்று சுதந்திர வர்த்தக வலயத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறியமுடிகின்றது. இத்தகைய செயற்பாடுகள் இந்த பௌத்த பூமியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு மகாசங்கத்தேரர்கள் ஒருபோதும் அனுமதியளிக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தியிருக்கிறார்.

கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். மாறாக இது நிறுத்தப்படாவிட்டால், தொழிற்சாலை செயற்பட ஆரம்பிக்கும் முதலாவது நாளில் விலங்கு ஒன்றுக்குப் பதிலாக நான் எனது தலையைப் பலிகொடுப்பேன். முதலில் எனது கழுத்தை அறுத்து இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிக்கலாம்.

தற்போது நாடு எதிர்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து மீண்டுவர வேண்டுமெனில், இவ்வாறான பாவகாரியங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்படக்கூடாது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நினைத்தால் அதனைச் செய்யலாம்.

நான் களனி தொகுதியில் மாட்டிறைச்சியைத் தடைசெய்தேன். அவ்வாறு மாட்டிறைச்சியை முழுமையாகத் தடைசெய்யுங்கள். அதேபோன்று இறைச்சியை விநியோகிக்கக்கூடியவாறான தொழிற்சாலை இயங்குவதையும் தடைசெய்யுங்கள்.

5 comments:

  1. மாடறுப்பைத் தடைசெய்தால் ஏற்படக்கூடிய சமச்சீர் இன்மையைச் சீராக்கும் நோக்கில் ஏற்றுமதித் திட்டம் கொண்டுவரப்படும் போலும்.

    ReplyDelete
  2. அந்தப் பெரும் காரியத்தைச் செய்துவிட்டாவது இந்த உலகத்திலிருந்து தொலைந்தால் பத்திரிகைகள் இணையத்தளங்களுக்கு கொஞ்சம் டீசன்ட் ஆன செய்திகள் கிடைக்கும்.

    ReplyDelete
  3. Innumoru Bussvaanam...Ayyooo Ayyooo

    ReplyDelete
  4. Ivargalayellam serththa daalathaan..UNP alinthu ponatho!!!!

    ReplyDelete
  5. நல்லபிள்ளை கதைக்கிதுப்பா.எல்லாரும் கேளுங்க.

    ReplyDelete

Powered by Blogger.