Header Ads



பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வெளியுறவு செயலாளர் மட்ட இருதரப்பு அரசியல் ஆலோசனை

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வெளியுறவு செயலாளர் மட்ட இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் (BPC) 6 வது சுற்று 2020 டிசம்பர் 16 அன்று ஆன்லைன் முறையில் நடைபெற்றது.வெளியுறவு செயலாளர் சோஹைல் மஹ்மூத் பாகிஸ்தான் தரப்பிக்கு தலைமை தாங்கியதோடு இலங்கை தரப்பு சார்பாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜெயநாத் கொலம்பகே தலைமை தாங்கினார்.

இதன் போது, அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைகள் மற்றும் மக்கள் தொடர்பு பரிமாற்றல்கள் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.1948 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, பாகிஸ்தானும் இலங்கையும் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நல்லுறவை பேணிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு செயலாளர் சோஹைல் மஹ்மூத் இருதரப்பு அரசியல் உறவுகளின் தரத்தையும், தலைமை மட்டத்தில் நல்லுறவையும் சுட்டிக் காட்டினார்.இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் சிறந்த அரசியல் உறவுகளுடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இருதரப்பு ஒத்துழைப்பை  வலுப்படுத்துவதற்கும் அதற்கான புதிய வழிமுறைகளை ஆராய்வதற்கும் இருதரப்பும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

மேலும், உலக அளவில் COVID-19 இன் தாக்கத்தையும், அது மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தி உள்ள  விளைவுகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்  என்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.பிரதமர் இம்ரான் கானின், அபிவிருத்தியடைந்தது வரும் நாடுகளுக்கான ‘கடன் நிவாரணம் குறித்த உலகளாவிய முன்முயற்சி’ குறித்து இலங்கை பிரதிநிதிகளுக்கு வெளியுறவு செயலாளர் விளக்கமளித்தார்.

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் நிலைமை, சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதையின் முன்னேற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்புகளுக்கு பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து வெளியுறவு செயலாளர் விளக்கப்படுத்தினார். மேலும் , "சார்க்" அமைப்பு மீதான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை அவர் தெரியப்படுத்தியதோடு ,பிராந்திய ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்  என்ற நம்பிக்கையையும்  வெளிப்படுத்தினார்.

இஸ்லாமாபாத்

17 டிசம்பர் 2020

1 comment:

  1. இரு நாடுகளும் சீனாவின் காலணித்துவ நாடுகள். இவர்கள் என்னதான் பேசினாலும் சீனாவின் அனுமதியின்றி ஒரு முடிவும் எடுக்கமுடியாதே.

    ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுக்கு 100% சொந்தமான பகுதி.
    பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பில் தற்போது இருக்கும் பகுதிகளையும் இந்தியா விரைவில் மீட்டு விடும்.

    ReplyDelete

Powered by Blogger.