Header Ads



எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலரும் தனி பௌத்த கொள்கைகளின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி


எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலரும் தனிச்சிங்கள பௌத்த கொள்கைகளின் ஊடாக ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று -20- நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளதாகவும், இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்குப் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு நிலைமை நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது சேர் தோல்வியடைந்து விட்டார் என்ற ஓர் எண்ணக்கரு உருவாகியுள்ளதாகவும் ,உண்மையில் சேர் தோல்வியடையவில்லை ,சேரை ஆட்சி பீடம் ஏற்றிய கொள்கைகளே தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லிபரல் ஜனநாயகக் கொள்கைகள் மெய்யான பௌத்த மதக்கொள்கைகளில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதக்கொள்கை என்றவுடன் மதுபானக் கடைகளை மூடி அரேபிய நாடுகளில் போன்று கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதைத் தாம் கூறவில்லை எனவும், கீழே விழும் அளவிற்குக் குடிக்காவிட்டாலும் எந்த நாளும் தற்பொழுது தாமும் மதுபானம் அருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டுக்குத் தேவை எனவும், பூச்சியத்திலிருந்து கட்சியை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இலங்கையில் இனவாதம் பேசாமல் வாக்குப்பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வெற்றி பெற வேண்டின் இனவாதம் பேசித்தான் ஆக வேண்டியுள்ளது. அதனைச் செய்யாது விட்டால் தற்போதைய ஆட்சியே காலாதிகாலத்துக்கும் இருக்கும். மக்கள் விடுதலை முன்னணியின் வாக்கு வங்கி தொடர்ச்சியாக சரிவடையக்காரணம் அவர்கள் இனவாதம் பேச விரும்பவில்லை என்பதலாகும். அவர்களிலிருந்து பிரிந்து இனவாதம் பேசுவதில் மும்முரமாக இருப்பவர்கள் வெற்றி பெறுவதுடன் அமைச்சராகவும் ஆகிவிடுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.